சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து வொங் ஜென் விலகல்

10 ஆகஸ்ட் 2026, 1:48 PM
சுபாங் நாடாளுமன்ற  உறுப்பினர் பொறுப்பிலிருந்து வொங் ஜென் விலகல்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 8 - சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து வொங் ஜென் விலகினார்.

அவரது பதவி விலகல் இன்று மாலை மணி 5.00 முதல் அமலுக்கு வந்தது.

மூன்று தவணைகள் நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் சேவையாற்றி வந்த வொங் ஜென் , தமது பதவி விலகல் கடிதத்தை, இம்மாதம் ஆகஸ்ட் 5- ஆம் தேதி மக்களவைத் தலைவர் டான் ஸ்ரீ ஜோஹாரி அப்துலிடம் சமர்பித்து விட்டதை உறுதிப்படுத்தினார்.

நாடாளுமன்ற நிர்வாகம் தேவையான தயார் நடவடிக்கைகளை எடுப்பதற்கான கால அவகாசத்தை வழங்குவதற்காக , தாம் முன்கூட்டியே அந்த பதவி விலகல் கடிதத்தை சமர்பித்ததாக, வொங் ஜென் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

கூட்டரசு அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டு , பதவி விலகும் முடிவு சுயமாக எடுக்கப்பட்டது என குறிப்பிட்டு, வொங் ஜென் , தமது பதவி விலகல் கடிதத்தின் நகலையும் பகிர்ந்துக் கொண்டார்.

மேலும் இந்த முடிவு தொடர்பில் நாளை காலை மணி 11-க்கு செய்தியாளர் சந்திப்பை நடத்தவிருப்பதாகவும் அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.