பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30 : கோலா சிலாங்கூரில் மாடு ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (ஜூலை 30) அதிகாலை ஜெராம், ஜாலான் டத்தோ மிஸ்கூனில் (Jalan Dato Miskun) நிகழ்ந்தது.
"22 வயதுடைய அந்த ஆடவர், காப்பார் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த மாடு மீது மோதியுள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்," என்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கோலா சிலாங்கூர் மாவட்ட ஓசிபிடி சுப்ரிடெண்டன் அஸஹருதீன் தாஜுடின் தெரிவித்தார்.







