ஷா ஆலாம், ஜூலை 28 -
நேற்று இரவு 9.57 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், அதைத் தொடர்ந்து ஸ்ரீ கெம்பாங்கான் தீயணைப்பு,மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மலேசிய தீயணைப்பு -மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் தெரிவித்தார்.
இரவு 10.22 மணிக்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் யாருக்கும் எந்தப் பாதிப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.
முன்னதாக , நெடுஞ்சாலையோர எண்ணெய் நிலையத்தின் விலைப்பட்டியல் பலகை தீப் பற்றி எரிந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டிருந்தது.





