ஷா ஆலம், ஜூலை 26: சிலாங்கூர் இளவரசர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா மற்றும் டத்தின் படுகா ஸ்ரீ அஃப்சா ஃபடினி தம்பதியர், தங்களின் முதல் பெண் குழந்தையின் பிறப்பை அறிவித்துள்ளனர்.
அந்த அரச குடும்பக் குழந்தைக்கு தெங்கு அலியா அமீரா தெங்கு அமீர் ஷா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சிலாங்கூர் இளவரசரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தின் வழியாக வெளியிடப்பட்டது.
அதில், இளவரசர் தம்பதியரின் பெண் குழந்தை 2026 ஜூலை 21 அன்று, பிற்பகல் 2:56 மணிக்கு பிறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதே பதிவில், தெங்கு அமீர் ஷா தங்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்ததுடன், அரச குடும்பத்தின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
ராஜா மூடா தெங்கு அமீர் ஷா மற்றும் டத்தின் படுகா ஸ்ரீ அஃப்சா ஃபடினி ஆகியோரின் அரச திருமணம் கடந்த 2025 அக்டோபர் 2-இல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.





