சிலாங்கூர் பழத்திருவிழா 2026: 40 டன் உள்ளூர் பழங்கள்; அன்னாசிப்பழம் வெறும் RM1 மட்டுமே!

25 ஜூலை 2026, 7:48 AM
சிலாங்கூர் பழத்திருவிழா 2026: 40 டன் உள்ளூர் பழங்கள்; அன்னாசிப்பழம் வெறும் RM1 மட்டுமே!
சிலாங்கூர் பழத்திருவிழா 2026: 40 டன் உள்ளூர் பழங்கள்; அன்னாசிப்பழம் வெறும் RM1 மட்டுமே!
சிலாங்கூர் பழத்திருவிழா 2026: 40 டன் உள்ளூர் பழங்கள்; அன்னாசிப்பழம் வெறும் RM1 மட்டுமே!
சிலாங்கூர் பழத்திருவிழா 2026: 40 டன் உள்ளூர் பழங்கள்; அன்னாசிப்பழம் வெறும் RM1 மட்டுமே!
சிலாங்கூர் பழத்திருவிழா 2026: 40 டன் உள்ளூர் பழங்கள்; அன்னாசிப்பழம் வெறும் RM1 மட்டுமே!

ஷா ஆலம், ஜூலை 25: 2026-ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில பழத் திருவிழாவை முன்னிட்டு, மொத்தம் 40 டன் உள்ளூர் பழங்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இதில் 'ஹேப்பி ஹவர்' (Happy Hour) சிறப்புச் சலுகையின் கீழ், உயர்தர MD2 ரக அன்னாசிப்பழங்கள் வெறும் 1 ரிங்கிட் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

பொதுமக்கள் உள்ளூர் பழங்களை மிக மலிவான விலையில் பெற்றுக் கொள்வதற்காகவே இந்தச் சிறப்புச் சலுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விவசாய- உள்கட்டமைப்புக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இர். இஜாம் ஹாஷிம் தெரிவித்தார்.

"எங்களிடம் 'ஹேப்பி ஹவர்' எனப்படும் மலிவு விலை விற்பனை உள்ளது. வழக்கமாக 8 ரிங்கிட்டிலிருந்து 10 ரிங்கிட் வரை விற்கப்படும் அன்னாசிப்பழம் வெறும் 1 ரிங்கிட்டுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

பொதுமக்களுக்காகப் போதுமான அளவு கையிருப்புகளைத் தயார் நிலையில் வைத்துள்ளோம்," என்று அவர் கூறினார்.

நேற்று, இங்குள்ள செக்சன் 14, அனேகா வாக் (Aneka Walk) வணிக வளாகத்தில் நடைபெற்ற 2026 சிலாங்கூர் மாநில பழத் திருவிழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

'ஹேப்பி ஹவர்' சலுகையின் போது தலா 1 ரிங்கிட் மற்றும் 2 ரிங்கிட் விலையில் விற்கப்படும் MD2 அன்னாசிப்பழங்களுடன், வருகையாளர்கள் 'நாங்செம்' (nangchem - பலாப்பழம் மற்றும் செம்படாக் கலப்பினப் பழம்) பழங்களையும் தலா 2 ரிங்கிட் விலையில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

அதே வேளையில், மங்குஸ்தீன், ரம்புத்தான், தோக்கோங் (Dokong), புலாசான் (Pulasan) மற்றும் சில வகையான பழங்கள் ஒரு கிலோகிராம் வெறும் 2 ரிங்கிட் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) வரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த பழத் திருவிழாவில், பழ, விவசாய வியாபாரிகள் என மொத்தம் 27 தொழில்முனைவோர் பங்கேற்றுள்ளனர்.

மூன்று நாட்கள் நடைபெறும் இத்திட்டத்தின் மூலம் 10,000 வருகையாளர்களை ஈர்க்கவும், 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான விற்பனையை எட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பழங்களில் டுரியன், மங்குஸ்தீன், ரம்புத்தான், தோக்கோங், புலாசான், டுக்கு லாங்சாட், பம்பளிமாஸ் (Limau bali), டிராகன் பழம், லோஹான் கொய்யா, சோளம், MD2 அன்னாசி, செம்படாக் மற்றும் பலாப்பழம் ஆகியவை அடங்கும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.