கோலாலம்பூர், ஜூலை 17 : 2027 சீ கேம்ஸ் போட்டியில் ஐந்து புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
தென்கிழக்காசிய விளையாட்டுக் கூட்டமைப்பு (SEAGF) சம்மேளனம் இன்று வெள்ளிக்கிழமை இறுதிப் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து, சீ கேம்ஸில் மொத்த விளையாட்டுகளின் எண்ணிக்கை 43- ஆக உயர்ந்துள்ளது.
நடன விளையாட்டு (dance sport), ஐஸ் ஹாக்கி (ice hockey), கபடி (kabaddi), பெடல் (padel) மற்றும் டெக்பால் (teqball) ஆகியவை புதிதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட விளையாட்டுகளாகும்.
அதே வேளையில், சின்லோன் (Chinlone) விளையாட்டு செபக் தக்ராவின் (sepak takraw) கீழும், போலோ (polo) விளையாட்டு குதிரையேற்றத்தின் (equestrian) கீழும் ஒரு பிரிவாக சேர்க்கப்பட்டுள்ளன.
சன்வே ரிசார்ட் தங்கும் விடுதியில் நடைபெற்ற 2025-2027 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது SEAGF சம்மேளன கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.



