ஆகஸ்ட் 8-ல் ரவாங்கில் சுகாதார முகாம்: முதியவர்களுக்கு இலவச இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி

17 ஜூலை 2026, 6:23 AM
ஆகஸ்ட் 8-ல் ரவாங்கில் சுகாதார முகாம்: முதியவர்களுக்கு இலவச இன்ஃப்ளூயன்ஸா  தடுப்பூசி
ஆகஸ்ட் 8-ல் ரவாங்கில் சுகாதார முகாம்: முதியவர்களுக்கு இலவச இன்ஃப்ளூயன்ஸா  தடுப்பூசி

ஷா ஆலாம், ஜூலை 17 : ரவாங் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த முதியவர்கள், வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி கம்போங் சுங்கை தெரெந்தாங் (Kampung Sungai Terentang) கூடைப்பந்து மைதானத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இலவச இன்ஃப்ளூயன்ஸா (Influenza) தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள்.

காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடைபெறும் இந்நிழ்ச்சியில், 50 முதல் 59 வயதுக்குட்பட்ட நபர்கள் வெறும் 5 ரிங்கிட் கட்டணத்தில் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம் என ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் (Chua Wei Kiat) தெரிவித்தார்.

"இதுமட்டுமின்றி, உடல் நிறை குறியீட்டெண் (BMI) மற்றும் இரத்த அழுத்தப் பரிசோதனை உள்ளிட்ட இலவச சுகாதாரப் பரிசோதனைகளும் அங்கு வழங்கப்படவுள்ளன.

மேலும், பொதுமக்கள் தங்களின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை , கொலஸ்ட்ரால் அளவுகளையும் பரிசோதித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.