Kita Selangor ஆம்புலன்ஸ் திட்டம் அனைத்து சட்டமன்றங்களுக்கும் விரிவாக்கம்; மெந்திரி பெசார்

15 ஜூலை 2026, 9:16 AM
Kita Selangor ஆம்புலன்ஸ் திட்டம் அனைத்து சட்டமன்றங்களுக்கும் விரிவாக்கம்; மெந்திரி பெசார்
Kita Selangor ஆம்புலன்ஸ் திட்டம் அனைத்து சட்டமன்றங்களுக்கும் விரிவாக்கம்; மெந்திரி பெசார்

ஷா ஆலாம், ஜூலை 15 - கித்தா சிலாங்கூர் ஆம்புலன்ஸ் ( Ambulans Kita Selangor) திட்டத்தின் இரண்டாவது கட்டம் இன்று தொடக்கி வைக்கப்பட்டது.

அந்த இலவச ஆம்புலன்ஸ் உதவித் திட்டம், இதற்கு முன்பிருந்த 26 சட்டமன்றங்களைக் காட்டிலும் இம்மாநிலத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக மெந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மேலும், மலேசிய செயின்ட் ஜொஹ்ன் ஆம்புலன்ஸ் அமைப்புக்கு சொந்தமான 48 அம்புலன்ஸ்களின் வாயிலாக சிலாங்கூரில் உள்ள 86 சுகாதார கிளினிக்குகள் , 23 அரசாங்க மருத்துவமனைகள் ஆகியவற்றையும் இந்த ஆம்புலன்ஸ் சேவை உள்ளடக்கியுள்ளது.

கடந்தாண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட இந்த கித்தா சிலாங்கூர் ஆம்புலன்ஸ் திட்டத்துக்காக மாநில அரசாங்கம் கிட்டத்தட்ட 10 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியிருப்பதாக அமிருடின் ஷாரி கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.