பிரிட்டனில் 16-17 வயதினருக்கு இரவு நேர சமூக ஊடக ஊரடங்கு

15 ஜூலை 2026, 4:43 AM
பிரிட்டனில் 16-17 வயதினருக்கு இரவு நேர சமூக ஊடக ஊரடங்கு

லண்டன், ஜூலை 15 - 16 மற்றும் 17 வயதுடைய பதின்ம வயதினர் இரவு நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க, சமூக ஊடக ஊரடங்கை அறிமுகப்படுத்தப் போவதாக பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்ஸ்தாகிராம், ஃபேஸ்புக் போன்ற பதின்ம வயதினர் அதிகம் அடிமையாகியிருக்கும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக, நள்ளிரவு முதல் காலை மணி 6 வரை இந்த சமூக ஊடகக் கட்டுப்பாடு அமலில் இருக்குமென அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.

அதோடு, சமூக ஊடகங்களில் புதிய பதிவுகள் தானாகவே அடுத்தடுத்து தோன்றுவதைத் தடுக்கும் நடவடிக்கையையும் அது எடுக்கவுள்ளது.

கடந்த மாதம், 16 வயதுக்கு கீழ்பட்ட பதின்ம வயதினர் ஸ்னப்செட் ( Snapchat), டிக் டாக், யூடியூப், இன்ஸ்தாகிரம், பேஸ்பூக் உள்ளிட சமூக ஊடகங்களைப் பயன்படுத்த பிரிட்டன் தடை விதித்திருந்தது. இந்த தடை அந்நாட்டில் அடுத்தாண்டு 2027 தொடக்கத்தில் அமலுக்கு வருகிறது.

இளம் வயதினர் போதிய தூக்கம் பெறுவது, பள்ளிக்கூடம், கல்லூரி படிப்புகளில் கவனம் செலுத்துவது, குடும்பம், நண்பர்கள் ஆகியோருடன் நேரத்தை செலவிடுவது ஆகியவற்றை உறுதி செய்வதற்காக இந்த சமூக ஊடக கட்டுப்பாடுகளை விதிப்பதாக, அந்நாட்டு தொழில்நுட்ப அமைச்சர் லிஸ் கென்டல் கூறியுள்ளார்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.