ஜோகூருக்கு 3 லட்சம் பேர் வாக்களிக்கத் திரும்புவார்கள்; வாகன நெரிசல் அதிகரிக்கும்

8 ஜூலை 2026, 4:38 AM
ஜோகூருக்கு 3 லட்சம் பேர் வாக்களிக்கத் திரும்புவார்கள்; வாகன நெரிசல் அதிகரிக்கும்

கோலாலம்பூர், ஜூலை 8 - இவ்வாரம் சனிக்கிழமை நடைபெறும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, வெளிமாநிலங்களில் இருந்து 3 லட்சத்துக்கும் அதிகமானோர் அம்மாநிலத்திற்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதையடுத்து அம்மாநிலத்தின் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படக் கூடும். அந்த நெரிசலைத் தவிர்க்க, தத்தம் தொகுதிகளுக்குத் திரும்புபவர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு மலேசிய நெடுஞ்சாலை வாரியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹஸ்னி மொஹமெட் கேட்டுக் கொண்டார்.

வாகனமோட்டிகளின் பாதுகாப்பான சுமூகமான பயணத்தை உறுதிச் செய்ய, சாலைகளை மூடும் பணிகளை நெடுஞ்சாலை வாரியம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கும்.

வாக்களிப்புக்காக ஜோகூருக்கு திரும்புபவர்கள் TuJu செயலியின் மூலம் தங்களின் பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டச்.என்.கோ (Touch'n Go), மின்னியல் பணப்பை (e-wallet ) வங்கிடெபிட் அட்டை ஆகியவற்றில் போதிய பாக்கி இருப்பதை உறுதிச் செய்யுமாறும் மலேசிய நெடுஞ்சாலை வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.