குரோஷியாவை வீழ்த்தி 16-வது சுற்றுக்கு முன்னேறிய போர்த்துகல்

3 ஜூலை 2026, 3:13 AM
குரோஷியாவை வீழ்த்தி 16-வது சுற்றுக்கு முன்னேறிய போர்த்துகல்

டொராண்டோ, ஜூலை 3: டொராண்டோ அரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் நாக் அவுட் சுற்றில் குரோஷியாவை 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தி போர்த்துகல்

16-வது சுற்றுக்கு (Round of 16)முன்னேறியது.

போட்டியின் 53-வது நிமிடத்தில் இவான் பெரிசிச் (Ivan Perisic) அடித்த கோல் மூலம் குரோஷியா முதலில் முன்னிலை பெற்றது.

ஆனால், 68-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடிக்க, போர்த்துகல் ஆட்டத்தைச் சமப்படுத்தியது.

ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயமடைந்ததற்காக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் (Injury time) மாற்று ஆட்டக்காரராக களம் இறங்கிய கோன்சலோ ராமோஸ் (Goncalo Ramos) போர்த்துகலின் வெற்றி கோலை அடித்தார்.

16-வது சுற்றில் போர்த்துகல் அணி ஸ்பெயினை எதிர்கொள்கிறது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.