டாக்கா, ஜூலை 2: வங்காளதேசத்தில் ஈரப்பதமான வானிலை மற்றும் போதிய கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் இல்லாததன் காரணமாக, அடுத்த இரண்டு மாதங்களில் டிங்கி காய்ச்சல் பாதிப்பு மிகக் கடுமையான உச்சத்தைத் தொடக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த நோயின் தாக்கம், கடந்த சில வாரங்களாகத் தீவிரமடைந்துள்ளது.
இது, கடந்த 2023ஆம் ஆண்டில் அந்நாடு சந்தித்த மிக மோசமான மற்றும் ஆபத்தான டிங்கி பரவலைப் போன்றதொரு அச்ச நிலையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
கொசுக்களை ஒழித்தல், தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுதல், மருத்துவமனைகளைத் தயார்படுத்துதல் மற்றும் பொதுமக்கள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்துதல் போன்றவற்றின் மூலம் இந்த நிலவரத்தை எதிர்கொள்ளத் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையின், இந்நாடு கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கான மிக மோசமான தட்டம்மை (Measles) நோய்ப் பரவலையும் எதிர்கொண்டு வருகிறது.







