சுங்கை பட்டாணி, ஜூன்28 - தாமான் ரியா ஜயாவில் உள்ள டிஎன்பி (TNB) துணை மின்நிலையத்தில் இருந்து கேபள் கம்பிகளைத் திருட முயன்றபோது, மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உடல் முழுவதும் 70 விழுக்காடு தீப்புண் காயங்களுக்கு ஆளாகினார்.
விரைந்து மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அப்பெண் மருத்துவ நோக்கத்துக்காக சுயநினைவற்ற நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக குவாலா மூடா போலீஸ் துணை தலைமை ஆணையர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.
அப்பெண்ணின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அப்பெண்ணின் அடையாளத்தைக் கண்டுபிடிப்பது உட்பட விசாரணைத் தொடர்வதாக ஹன்யான் குறிப்பிட்டார்.





