ஜோர்ஜ்டவுன், ஜுன் 23 - பி.எஸ்.என் (BSN) வங்கியின் பிரிமியம் சேமிப்புத் திட்டத்தின் மில்லியனராகும் குலுக்கலில் 73 வயதான பெளத்தப் பிக்கு, 10 லட்சம் ரிங்கிட்டை வென்று அதிர்ஷ்டசாலியாகியிருக்கின்றார்.
பினாங்கு பட்டவொர்த்தைச் சேர்ந்த ஜான் ஜய் சியாங் ( Chan Chai Siang ) தற்போது Air Itam-மில் வசிக்கும் நிலையில், கடந்தாண்டு ஜனவரித் தொடங்கியே பி.எஸ்.என் எஸ்.எஸ்.பி ( BSN SSP ) திட்டத்தில் சேமிக்கத் தொடங்கினார்.
பொது மக்களிடமிருந்து கிடைத்த நன்கொடை பணம், அங்பாவ் (Angpau) பணம் ஆகியவற்றையே தனது வங்கிக் கணக்கில் சேமித்து வைத்ததாக ஜான் ஜய் சியாங் தெரிவித்தார்.
தற்போதைக்கு தான் வென்ற பரிசுப்பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது எனத் திட்டமிடவில்லை. எனவே, அப்பணத்தை சேமிப்பிலே வைக்கப் போவதாக, 1985-ஆம் ஆண்டுத் தொடங்கி பெளத்தப் பிக்குவாக இருக்கும் ஜான் குறிப்பிட்டார்.
ஜனவரியிலிருந்து நவம்பர் வரையில் மாதந்தோறும் BSN வங்கி, BSN SSP 10 லட்சம் குலுக்கல் திட்டத்தையும், டிசம்பரில் பொனான்சா ( Bonanza ) பரிசுத் திட்டத்தையும் மேற்கொள்கிறது. பொனான்சா ( Bonanza ) பரிசுத் திட்டத்தின் கீழ் பத்து லட்சம் ரிங்கிட்டும் போர்ஷே மாகன் எக்ஸ் ( Porshe Macan X )காரும் பரிசாக வழங்குகிறது.


