பெட்டாலிங் ஜெயா, ஜுன் 20 - 2012-இல் நிகோல் டேவிட்டுக்குப் பின்னர், பிஎஸ்ஏ ஸ்குவாஷ் பயணத் தொடரின் ( PSA Squash Tour) இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் மகளிர் ஆட்டக்காரராக எஸ். சிவசங்கரி திகழ்கிறார்.
நேற்று மாலை பாரிசில் நடைபெற்ற அரையிறுதியில் அவர் எகிப்தைச் சேர்ந்த அமினா ஓர்ஃபியை ( Amina Orfi ) வீழ்த்தி இறுதியாட்டத்திற்குள் நுழைந்தார். முன்னதாக 74 நிமிடங்கள் நீடித்த கடும் போட்டி நிலவிய அந்த அரையிறுதி ஆட்டத்தில் சிவசங்கரி ஒர்ஃபியை 8-11, 11-10, 11-8, 11-10 என்ற புள்ளிகளில் வீழ்த்தினார்.
இன்று நடைபெறும் இறுதியாட்டத்தில் சிவசங்கரி எகிப்தின் மற்றுமோர் ஆட்டக்காரர் ஹனியா எல் ஹம்மாமியைச் (Hania El Hammamy) சந்திக்கிறார். ஹனியாவுடான இதற்கு முந்தைய 10 ஆட்டங்களில் சிவசங்கரி இரு முறை மட்டுமே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கெடாவைச் சேர்ந்த உலகின் ஐந்தாம் நிலை ஆட்டக்காரரான சிவசங்கரி இவ்வாண்டு ஏப்ரல் சுவிட்சர்லாந்து சூருக்கில் நடைபெற்ற கிராஸ்ஹொப்பர் கிண்ண வெற்றியாளர் போட்டியின் பட்டத்தை வென்றார்.








