ஷா ஆலாம், ஜூன் 18: சிலாங்கூர் மாநிலம் போட்டியாற்றலுடன் தொடர்ந்து வளர்ச்சி கண்ட மாநிலமாகத் திகழ நகர் சீரமைப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
அந்த நோக்கத்தின் அடிப்படையில், சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (PKNS), SA சென்ட்ரல்’ (SA Sentral) எனும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
அத்திட்டத்தின் கீழ் ஷா ஆலாம், செக்ஷன் 14-இல் சுமார் 145 ஏக்கர் (58.68 ஹெக்டேர்) பரப்பளவில் நவீன ஒருங்கிணைந்த எதிர்கால மாநகரம் உருவாகவுள்ளது.
இத்திட்டம், புதிதாக திறக்கப்படவிருக்கும்
'எல்.ஆர்.டி 3 -டத்தோ மெந்திரி' (LRT3 Dato’ Menteri) நிலையத்துடன் நேரடி இணைப்பைக் கொண்டிருக்கும்.
இம்மாநகர் திட்டம் முழுமையடையும் போது, தற்கால நகர்ப்புறச் சமூகத்தின் மாறிவரும் வாழ்க்கை முறைக்கும் தேவைகளுக்கும் ஏற்ப மிக நவீனமான, விறுவிறுப்பான, ஆக்கப்பூர்வமான நகரமாக உருவெடுக்கும்.

வணிக வளாகங்கள், சமூகக் கூடங்கள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு ஆகியவற்றை இந்த 'SA சென்ட்ரல்' ஒருங்கிணைத்திருக்குமென அம்மாநகர் திட்டத்தின் தலைமை செயல்முறை அதிகாரி Datuk Mohd Najib Ibrahim தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக, 'SA சென்ட்ரல்' என்பது வெறும் ஒரு கட்டுமானத் திட்டம் மட்டுமல்லாமல், எதிர்கால நகர்ப்புற சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஷா ஆலாம் நகரை ஒரு நிலையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த மாநகரமாக மாற்றுவதற்கான முக்கியத் தளமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



