காசான், ஜூன் 17 - மலேசியா - தாதர்ஸ்தான் (Tatarstan) குடியரசு ஆகிய இருதரப்புக்கும் இடையே வர்த்தகம், முதலீடு, ஹலால், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
காசான் நகரை சென்றடைந்த மலேசியப் பிரதமர், தாதர்ஸ்தான் குடியரசின் தலைவரான ரஸ்தாம் மின்னிகானோவைச் (Rustam Minnikhanov) சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் இருநாடுகளும் பயனடையக்கூடிய புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.
மேலும், ரஷ்ய கூட்டமைப்பின் முதன்மை எண்ணெய் உற்பத்தி வட்டாரங்களில் ஒன்றாகத் தாதர்ஸ்தான் விளங்குவதால், எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு வாய்ப்புகளைக் கண்டறிவதிலும் இச்சந்திப்பில் முக்கியக் கவனம் செலுத்தப்பட்டது.
ஆசியான்-ரஷ்யா நினைவு உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யா சென்றுள்ள பிரதமர் அன்வார், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எரிசக்தி கையிருப்புக்கான உத்தரவாதத்தைப் பெறும் முயற்சியாக அந்த சந்திப்பு அமையவிருக்கின்றது.



