ஷா ஆலம், மே 31: உலு லங்காட், டூசுன் துவா பகுதியில் உள்ள 11 சலேட் (chalet) மற்றும் உல்லாச விடுதி உரிமையாளர்கள், சுற்றுலாத் தளத்தில் கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில் கேடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் (KDEBWM) நிறுவனத்தின் குப்பை சேகரிப்பு மற்றும் அகற்றும் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுடன் நடத்தப்பட்ட பல கட்டப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக இந்த முடிவு எட்டப்பட்டதாக டூசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் (ADN) டத்தோ வீரா ஜோஹான் அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.
இதற்கு முன்னர், சில விடுதி உரிமையாளர்கள் தாங்களாகவே குப்பைகளை அகற்றி வந்தனர். அதேவேளையில், மற்றவர்கள் சில இடங்களில் பொது மக்களுக்காக வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகள் மற்றும் குப்பை அகற்றும் தளங்களைப் பயன்படுத்தி வந்ததாக அவர் கூறினார்.
"வணிக நடவடிக்கைகளுக்குப் பொது வசதிகளைப் பயன்படுத்தும்போது, அது அப்பகுதியின் குப்பை கொள்ளளவு மற்றும் மேலாண்மையைப் பெரிதும் பாதிக்கலாம். முறையான மற்றும் சீரான கழிவு அகற்றும் அமைப்பை உறுதி செய்ய இந்த ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது," என்று அவர் தனது முகநூல் (Facebook) பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டத்தில் இணைந்துள்ள சலேட் மற்றும் விடுதிகளில் அஜ்லா வில்லேஜ் (Ajla Village), இடாமான் நுரானி (Idaman Nurani), லமான் இஃப்தித்தா (Laman Iftitah), ஸ்கைகேம் (Skycam) மற்றும் டெடாவூன் (Dedaun) ஆகியவையும் அடங்கும்.
சுற்றுலாப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்தும் முயற்சியில் இந்த நடவடிக்கை ஒரு நேர்மறையான வளர்ச்சியாகும் என்று ஜோஹான் கூறினார்.
மேலும், இது அப்பகுதியின் தூய்மையைப் பேணிக் காக்கவும், கட்டுப்பாடற்ற முறையில் குப்பைகள் வீசப்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
"இந்த 11 சலேட் மற்றும் உல்லாச விடுதி உரிமையாளர்கள் எடுத்துள்ள நடவடிக்கை ஒரு சிறந்த முன் மாதிரியாகும். நமது பகுதியில் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத் தன்மையைப் பேணிக் காப்பதில் மற்ற உரிமையாளர்களும் தங்களின் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயல்பட இது ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்," எனவும் அவர் மேலும் கூறினார்.
டூசுன் துவாவில் 11 சலேட், உல்லாச விடுதி உரிமையாளர்கள் KDEBWM குப்பை சேகரிப்புத் திட்டத்தில் இணைந்தனர்
31 மே 2026, 6:00 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சுக்மா தளங்களில் தூய்மையைப் பேண KDEBWM நிறுவனம் RM240,000 ஒதுக்கீடு
Sofia Nasir
22 ஆகஸ்ட் 2026

selangor
KDEBWM: சிலாங்கூர் மக்களிடையே குப்பைகளைப் பிரித்தெடுக்கும் விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது
Shalini Rajamogun
27 ஜூலை 2026

national
விசாகத் தினத்தில் சீரான குப்பைச் சேகரிப்பு: ஒன்பது உள்ளூராட்சி மன்றங்கள் 100 சதவீத இலக்கை அடைந்தன
Shalini Rajamogun
4 ஜூன் 2026

selangor
பண்டான் இண்டா பகுதியில் திடீர் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வாக வடிகால் மேம்பாட்டு திட்டம்
Shalini Rajamogun
6 மே 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



