விசாக தின நல்வாழ்த்துகள்: மகிழ்ச்சியுடனும் நல்லிணக்கத்துடனும் கொண்டாட மந்திரி புசார் வாழ்த்து

31 மே 2026, 5:19 AM
விசாக தின நல்வாழ்த்துகள்: மகிழ்ச்சியுடனும் நல்லிணக்கத்துடனும் கொண்டாட மந்திரி புசார் வாழ்த்து

ஷா ஆலம், மே 31: மலேசியர்களுக்கும், குறிப்பாக சிலாங்கூர் மக்களுக்கும் டத்தோ மந்திரி புசார் தனது இனிய விசாக தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த உலகத்தில் கௌதம புத்தர் அவதரித்ததை நினைவுகூரும் ஒரு மாபெரும் பண்டிகையாக விசாக தினம் விளங்குகிறது என்று டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்."பல்வேறு மோதல்களால் தவித்து வரும் தற்போதைய உலகிற்கு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வாழ்க்கையின் அடிப்படையாகக் கொள்ளும் புத்தரின் போதனைகள் மிகவும் அவசியமானதாகும்.

""உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் இந்த விசாக பண்டிகை மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப் பட வேண்டும் என வாழ்த்துகிறேன்," என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் முக்தி அடைதல் ஆகியவற்றை விசாக  தினம் குறிக்கிறது. இந்நாளில் பௌத்தர்கள் சிறப்புப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதோடு, புறாக்களை விடுவித்தல் மற்றும் ஏழைகளுக்கு உணவளித்தல் போன்ற நற்செயல்களிலும் ஈடுபடுவர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.