கோலாலம்பூர், 30 மே (பெர்னாமா) -- சிறந்த கல்வி வாய்ப்புகள், தரமான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் விரிவான அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றின் மூலம் சபா மற்றும் சரவாக் மாநிலங்கள் சமமான மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிப் பலன்களைப் பெறுவதை மடாணி அரசாங்கம் உறுதி செய்யும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இரு மாநில மக்களும் மேலும் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று காமத்தான் மற்றும் கவாய் திருவிழாக்களை முன்னிட்டு அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
காமத்தான் மற்றும் கவாய் திருவிழாக்கள், சபா மற்றும் சரவாக் மக்களின் பாரம்பரியம் மற்றும் மரபுகளில் வேரூன்றிய நன்றி தெரிவிக்கும் கொண்டாட்டங்கள் ஆகும். இவை ஒற்றுமை, ஒருமித்த கருத்து மற்றும் விளைச்சலுக்கான நன்றி ஆகிய உணர்வுகளுடன் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடப்படுகின்றன என்று அவர் கூறினார்.
"நமது நாட்டை அலங்கரிக்கும் பல்வேறு பழக்கவழக்கங்கள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு மத்தியில், பன்முகத்தன்மையில் நல்லிணக்கத்தைப் பேணுவதிலும், சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துவதிலும், பரஸ்பர மரியாதை கலாச்சாரத்தை வளர்ப்பதிலும்தான் மலேசியாவின் பலம் அடங்கியுள்ளது என்பதை இக்கொண்டாட்டங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன," என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் இந்தக் கொண்டாட்டங்கள் பிரதிபலிக்கின்றன என்று பிரதமர் கூறினார்.
சபா மற்றும் சரவாக் மக்கள் அனைவருக்கும் அவர் 'கோத்தோபியான் தகாசோ டோ காமத்தான்' மற்றும் 'காயு குரு கெராய் ஞாமாய்' வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
"இந்தக் கொண்டாட்டங்கள் செழிப்பையும், ஆசீர்வாதங்களையும் கொண்டு வரட்டும். அத்துடன், நமது நேசத்திற்குரிய மலேசியாவின் நல்லிணக்கத்திற்கு முதுகெலும்பாக விளங்கும் ஒருமித்த கருத்து மற்றும் ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்தட்டும்," என்று அவர் வாழ்த்தினார்.
-- பெர்னாமா
சபா, சரவாக் வளர்ச்சியை வலுப்படுத்த மடாணி அரசாங்கம் உறுதி - பிரதமர் அன்வார்
30 மே 2026, 5:44 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
(TVET) நிறுவன பட்டதாரிகளுக்கு கிட்டத்தட்ட 99.5 விழுக்காடு வேலை வாய்ப்புகள்
Pakiya
6 ஜூன் 2026

national
இன்று காமாத்தான் திருவிழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கிறார் பிரதமர்
Pakiya
30 மே 2026

national
சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு 16 வயது குறைந்தபட்ச வரம்பு குழந்தைகளின் டிஜிட்டல் அணுகலைத் தடுக்கும் முயற்சியாகக் கருதப்படக்கூடாது.
Pakiya
26 ஏப்ரல் 2026

national
தெற்கு தாய்லாந்து சந்தைக்கான ஒரு மூலோ-பாய வட்டார மையமாக மேம்படுத்தப்படும் ஆற்றலைக் கொண்டுள்ளது, கோத்தா பாரு விமான நிலையம்.
Pakiya
18 ஏப்ரல் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



