ஷா ஆலம், மே 26 - எதிர்வரும் ஹரி ராயா ஹாஜி, பள்ளி விடுமுறை மற்றும் நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையை (WCE) நெரிசல் மிகுந்த நேரங்களில் தினசரி 1,50,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விடுமுறை காலத்தில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதாலும், சுற்றுலா செல்வதாலும் நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் அதிகரிக்கும் என்று WCE வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வாகன ஓட்டிகளின் சீரான பயணத்தை உறுதி செய்வதற்காக, அவசரப் பணிகள் தவிர்த்து, சாலைப் பாதைகளை மூடும் வகையிலான அனைத்து கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முக்கிய இடங்களில் இழுவை வண்டிகள் (tow trucks) நிறுத்தப்பட்டுள்ளதுடன், அவசரகால மீட்புக் குழுவினர் (ERT) மற்றும் ரோந்துப் பணியாளர்களின் எண்ணிக்கையும் 24 மணி நேரமும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்பட்டால் உடனடியாக அதனை எதிர்கொள்ளவும், பிரதான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்கூட்டியே எடுக்கப்பட்டுள்ளன," என நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் எனவும், வாகனம் ஓட்டும்போது பாதுகாப்பிற்கு முழு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் WCE நெடுஞ்சாலையின் நிர்வாக இயக்குநர் லிண்டன் ஆல்பிரட் பெலிக்ஸ் அறிவுறுத்தியுள்ளார்.
நெடுஞ்சாலையின் தற்போதைய போக்குவரத்து நிலவரம், வழிகாட்டி மற்றும் வசதிகள் அமைந்துள்ள இடங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள WCE திறன்பேசி செயலியை (mobile app) பயன்படுத்துமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
ஹரி ராயா ஹாஜி, நீண்ட விடுமுறை: WCE நெடுஞ்சாலையைத் தினசரி 1.50 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தும் என எதிர்பார்ப்பு
26 மே 2026, 9:37 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பிளஸ் நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து கணிசமாக அதிகரிக்கும்
Shalini Rajamogun
26 மார்ச் 2026

national
நாட்டின் முக்கிய விரைவுச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
Shalini Rajamogun
25 மார்ச் 2026

national
முக்கிய விரைவுச் சாலைகளில் வாகன நெரிசல் அதிகரிப்பு
Shalini Rajamogun
20 மார்ச் 2026

selangor
WCE விரைவுச்சாலையின் 4-வது பிரிவு நோன்புப் பெருநாளுக்கு முன் திறக்கப்படவுள்ளது
Mavitthran
10 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




