ஷா ஆலாம், மே 26: வாகன உரிமை மாற்றத்திற்கான ஆன்லைன் சேவைகள் உடனடியாக மீட்டமைக்கப் பட்டுள்ளன. இந்த அமைப்பின் செயல்பாட்டை மீண்டும் தொடர சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) ஒப்புக் கொண்டதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, JPJ தலைமை இயக்குநர் டத்தோ எடி ஃபட்லி ரம்லியுடன் தாம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகே இம்முடிவு எடுக்கப் பட்டதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
இந்த அமைப்பில் நடைபெறும் தவறான பயன்பாடு மற்றும் மோசடிகள் காரணமாக அத்துறைக்கு ஏற்படும் பொறுப்புகள் குறித்து முன்னதாக JPJ போக்குவரத்து அமைச்சகத்திற்கு (MOT) தகவல் தெரிவித்திருந்ததாக அவர் கூறினார்.
"எனவே, JPJ உடனடியாக ஆன்லைன் அமைப்பில் மேம் பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது.
"இருப்பினும், இந்த மேம்பாட்டுப் பணிகள் சாதாரணப் பயனாளர்களின் அன்றாட அலுவல்களைப் பாதிக்கக் கூடாது என்பதையும், JPJ அலுவலகங்களில் பெரும் நெரிசலை ஏற்படுத்தக் கூடாது என்பதையும் உறுதி செய்யுமாறு நான் JPJ-க்கு அறிவுறுத்தினேன்.
"இதற்காக ஆன்லைன் சேவைகளை உடனடியாக மீண்டும் தொடங்க அவர்கள் (JPJ) சம்மதித்துள்ளனர்," என்று அவர் இன்று தனது முகநூல் (Facebook) பதிவில் தெரிவித்தார்.
மேம்பாட்டுப் பணிகளுக்காக அமைப்பை நிறுத்திவைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் இந்த வார இறுதி நீண்ட விடுமுறை நாட்களில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, இன்று முதல் வாகன உரிமை மாற்றம் தொடர்பான அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக JPJ அறிவித்திருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்தத் தற்காலிக நிறுத்தம் பொது போர்டல், கியோஸ்க் (kiosk) மற்றும் JPJ-இன் கூட்டாளிகளான MyEG, eAuto Sdn Bhd உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் தளங்களையும் உள்ளடக்கியதாகும்.
பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களின் அறிவின்றி வாகன உரிமை மாற்றங்கள் செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து அதிகாரப்பூர்வ புகார்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்தே JPJ இந்த உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கையை எடுத்ததாகக் கூறப்பட்டது.
வாகன உரிமை மாற்றச் செயல்முறையின் பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் தொடர்ந்து பாதுகாப்பதை உறுதி செய்யும் வகையில், தற்போதைய அமைப்பைச் சரிபார்க்கவும் மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.
வாகன உரிமை மாற்ற அமைப்பு உடனடியாக மீண்டும் செயல்படத் தொடங்கியது
26 மே 2026, 5:40 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
ஒவ்வொரு AWAS காமிராவையும் பராமரிக்க ஆண்டுக்கு RM112,800 செலவு
Latchumy Ramamoorthy
3 ஜூலை 2026

selangor
மேலும் 5 புதிய எல்ஆர்டி 3 நிலையங்கள் கட்டப்படும்
Shalini Rajamogun, Sheeda Fathil
29 ஜூன் 2026

national
மலேசியாவில் 2030-க்குள் ட்ரோன் வழி சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துச் சேவை - அந்தோணி லோக்
Shalini Rajamogun
24 ஜூன் 2026

national
எல்.ஆர்.டி 3 (LRT3) ரயில் சேவை ஜூன் 29 முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும்
Shalini Rajamogun
22 ஜூன் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



