கோலாலம்பூர்: பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வித் திட்டங்கள் இனி உயர் கல்வி அமைச்சின் (KPT) கீழ் நிர்வகிக்கப் படவிருந்தாலும், ஆறாம் படிவ மாணவர்களுக்குத் தனது அமைச்சு தொடர்ந்து ஆதரவளிக்கும் என கல்வி அமைச்சர் ஃபத்லினா சீடேக் உறுதியளித்துள்ளார்.
அனைத்துப் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய திட்டங்களும் உயர் கல்வி அமைச்சால் மேற்பார்வையிட படும் என்ற முடிவின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்படுவதாக அவர் கூறினார்.
"ஒருவேளை இது ஆறாம் படிவ மாணவர்களுடன் எனது கடைசி உரையாக இருக்கலாம். இனி அவர்கள் உயர் கல்வி அமைச்சின் கீழ் ஒப்படைக்கப் படுவார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.
"நாட்டின் கல்விக் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆறாம் படிவ மாணவர்களை நான் மிகவும் இழப்பேன்," என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.
கல்வி அமைச்சு இதுவரை பல்வேறு முயற்சிகளைச் செயல் படுத்தியுள்ளதாக ஃபத்லினா குறிப்பிட்டார். அவற்றில், மாணவர்களே தங்களின் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தேர்தல் மூலம் தேசிய ஆறாம் படிவ மாணவர் பிரதிநிதிக் குழுவை நிறுவியதும் அடங்கும். மேலும், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் (USM) மற்றும் மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் (UKM) போன்ற பொது உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆறாம் படிவத் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதுமட்டுமின்றி, ஆறாம் படிவ மாணவர்களுக்குத் தொடக்கக் காலப் பள்ளி உதவித்தொகை வழங்குவது, மேலும் பல ஆறாம் படிவக் கல்லூரிகளை நிறுவுவது போன்ற முயற்சிகளையும் தனது அமைச்சு மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
"தேசிய ஆறாம் படிவ மாணவர் பிரதிநிதிக் குழுவின் செயல்பாடுகளுக்காக ஆண்டுதோறும் 50,000 ரிங்கிட் நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது," என்றார் அவர்.
இதனிடையே, பினாங்கு மாநில அளவில் நடைபெற்ற பல்கலைக்கழகத்திற்கு முந்தைய மாநாட்டின் ஏற்பாட்டாளர்களுக்கு ஃபத்லினா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் மாணவர்களின் குரல் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும் என நம்புவதாகவும் கூறினார்.
ஆறாம் படிவ மாணவர்களுக்கான ஆதரவு தொடரும்: கல்வி அமைச்சர் ஃபத்லினா
25 மே 2026, 2:13 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
தேவாலயத்தில் KPM ஈடுபாட்டுத் திட்டம் என குற்றச்சாட்டு, அவதூறு பரப்புவோர் மன்னிப்புக் கேட்க ஃபத்லினா வலியுறுத்தல்
Pakiya
14 மார்ச் 2026

national
திவேட்: பாலிடெக்னிக் கல்வி நிலையங்களைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் அதிகரிப்பு
Shalini Rajamogun
22 ஜூன் 2026

national
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை எதிர்கொள்ள மாணவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை உயர்கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
Pakiya
4 ஏப்ரல் 2026

national
தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் இலவசக் கல்வி திட்டத்தை விரிவுபடுத்த முயற்சி
Shalini Rajamogun
3 மார்ச் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?

