கோலாலம்பூர், ஏப்ரல் 4: மோசமடைந்து வரும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் சாத்தியக் கூறுகளை எதிர்கொள்ள, வளாகவாசிகள், குறிப்பாகப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவுவதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை உயர்கல்வி அமைச்சு (KPT) ஆராய்ந்து வருகிறது.
இந்த நெருக்கடி உலகப் பொருளாதாரத்தைப் பாதிப்பது மட்டுமல்லாமல், உயர்கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் நிதி நிர்வாகத்தையும் பாதிக்கிறது என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதர் கூறினார்.
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை எதிர்கொள்ள வளாகவாசிகளுக்கு உதவுவதில் அமைச்சும் அரசாங்கமும் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, தேசிய மாணவர் ஆலோசனைக் குழுவின் (MPPK) சில பிரதிநிதிகளை நேற்று சந்தித்ததாக ஜம்ரி கூறினார்.
"பல யோசனைகளும் பரிந்துரைகளும் முன் வைக்கப்பட்டன. இந்த விஷயத்தை தீவிரமாக ஆராய்ந்து உரிய கவனம் செலுத்துமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டேன்."
"இந்தச் சிக்கலைச் சமாளிக்க உயர்கல்வி அமைச்சால் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிப்பேன்," என்று அவர் இன்று தமது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.
மிக முக்கியமாக, மாணவர்களின் குரல் கேட்கப்படுவது மட்டுமல்லாமல், அது செயலாக மாற்றப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
https://mediaselangor.com/ms/2026/04/350649
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை எதிர்கொள்ள மாணவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை உயர்கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
4 ஏப்ரல் 2026, 7:56 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
1.18 மில்லியன் உயர்கல்வி மாணவர்களுக்கு RM100 மதிப்புள்ள புத்தக வவுச்சர்கள் இன்று முதல் விநியோகம்
Shalini Rajamogun
15 ஜூலை 2026

selangor
உடனே விண்ணப்பிக்கவும் -உயர் கல்வி நிறுவன ரிம 1,000 உதவிக்கு தகுதி உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Pakiya
30 மார்ச் 2026

---
SKTTDI Jaya rangkul kejuaraan ke-5 Pertandingan Kitar Semula F&N dan MBSA
admin
22 அக்டோபர் 2013

---
Graduan KUIS buta mata, cerah minda
admin
11 செப்டெம்பர் 2013

வகைnational
உங்கள் கருத்து என்ன?



