ஷா ஆலம், மே 5: புக்கிட் லஞ்சான் சட்டமன்றத் தொகுதி (DUN) சேவை மையம், கைராட் டாருல் எஹ்சான் (KDE) நலத்திட்டத்திற்குப் பதிவு செய்யும் நடவடிக்கையை எளிதாக்கும் வகையில், மே 5 மற்றும் மே 19, 2026 ஆகிய தேதிகளில் பதிவு முகாமைத் திறக்கவுள்ளது.
இப்பகுதியைச் சேர்ந்த 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்காக இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாகப் புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் பூவா பெய் லிங் தெரிவித்தார்.
விண்ணப்பதாரர்கள் அல்லது அவர்களின் தகுதியான குடும்ப உறுப்பினர்கள், வழங்கப்படும் QR குறியீட்டைப் பயன்படுத்தி இணையம் வழியாகவும் பதிவு செய்யலாம் என்று அவர் கூறினார்.
"விண்ணப்பதாரர்கள் சிலாங்கூரில் பதிவுசெய்த வாக்காளர்களாக இருக்க வேண்டும். பதிவு செயல்முறையை நிறைவு செய்ய அவர்கள் நேரடியாக முகாமிற்கு வர ஊக்குவிக்கப்படுகிறார்கள்," என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.
கைராட் டாருல் எஹ்சான் திட்டம், பதிவு செய்யப்பட்ட வாரிசுதாரருக்கு RM1,000 மரண சகாய நிதிப் பலனை வழங்குகிறது. அதோடு, மரணமடைந்த உறுப்பினரின் குடும்பத்தினர் RM1,000 கூடுதல் நிதியுதவியையும் பெறத் தகுதி பெறுவர்.
விண்ணப்பத்திற்கான தகுதிகள்: விண்ணப்பதாரர் 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் அல்லது புக்கிட் லஞ்சான் சட்டமன்றத் தொகுதி வாக்காளராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் (OKU) அட்டை வைத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள், விண்ணப்பதாரரின் அடையாள அட்டை, வாரிசுதாரரின் அடையாள அட்டை நகல், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை ஆகும்.
புக்கிட் லஞ்சான் தொகுதியில் கைராட் டாரூல் ஏசான் (KDE) பதிவு முகாம்: பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு
5 மே 2026, 2:33 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
கோத்தா கெமுனிங்கில் ‘ஸ்கிம் கைராட் டாருள் ஏசான்’ திட்டப் பதிவுக்கு நடமாடும் கவுண்டர்கள் ஏற்பாடு
Shalini Rajamogun
20 மே 2026

selangor
மரண சகாய நிதி திட்டத்தின் (KDE) கீழ் 4,049 உரிமைகோரல்கள் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளன
Shalini Rajamogun
7 ஜனவரி 2026

selangor
புக்கிட் லஞ்சான் தொகுதியில் இலவச மருத்துவப் பரிசோதனை
Shalini Rajamogun
1 ஆகஸ்ட் 2025

உங்கள் கருத்து என்ன?




