ஷா ஆலம், மே 4: இன்று நண்பகல் புஞ்சாக் ஆலாம், பெர்சியாரான் முக்தார் டஹாரியில் இரண்டு கார்களை சம்பந்தப்பட்ட விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட இருவரும் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்டதாகவும், பின்னர் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக பிற்பகல் 1.36 மணியளவில் அவசர அழைப்பு வந்தவுடன், புக்கிட் ஜாலுத்தோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகச் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) நடவடிக்கை மையத்தின் தலைவர் சிக் ஹம்டான் ஹம்சா தெரிவித்தார்.
"இந்த விபத்தில் பெரோடுவா கன்சில் மற்றும் பெரோடுவா ஆக்சியா ஆகிய இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன."
"39 மற்றும் 21 வயதுடைய இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் தங்களின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்டனர்."
"பின்னர், சுகாதார அமைச்சக (KKM) அதிகாரிகளால் இருவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது,” என்று ஹம்டான் ஹம்சா கூறினார்.
இதையடுத்து, தீயணைப்பு வீரர்களால் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, மேல் விசாரணைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
பெர்சியாரான் முக்தார் டஹாரியில் இரண்டு கார்கள் மோதி விபத்து: இருவர் மரணம்
4 மே 2026, 10:04 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
புஞ்சாக் ஆலாமில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனைத் தேடும் பணி தொடர்கிறது
Pakiya
30 ஏப்ரல் 2026

national
சிபுவில் சுற்றுலா பேருந்து விபத்து; 23 பேர் காயம்
Media Selangor Team
31 ஆகஸ்ட் 2026

video
Sunway Lagoon confirms accident, provides medical aid to victims
Kathiravan Manoharan
26 ஆகஸ்ட் 2026

national
புக்கிட் பெருந்தோங்கில் விபத்து; பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
Media Selangor Team
19 ஆகஸ்ட் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



