ஷா ஆலாம், மே 2: புஞ்சாக் ஆலமில் உள்ள லோரோங் சக்கரா பூர்ணாமாவில் சிறுவன் ஒருவன் தவறி விழுந்து வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் நடவடிக்கையாக மாநில அரசாங்கம் பாதுகாப்புக் வேலிகளையும் கால்வாய் மூடிகளையும் பொருத்தும்.
டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இப்பகுதியில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய இந்த உடனடி நடவடிக்கை முக்கியம் என்றார்.
"அப்பகுதியில் பொருத்தப்பட வேண்டிய பாதுகாப்பு கட்டமைப்பின் அளவு, நீளம் போன்ற அம்சங்களை நாங்கள் ஆராய்வோம்."
"உள்ளூராட்சி மன்றம் அல்லது சிலாங்கூர் மந்திரி புசார் வாரியம் (MBI) இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தலாம், இதை விரைவுபடுத்துமாறு நான் கேட்டுக் கொள்வேன்," என்று அவர் சினார் ஹரியான் அறிக்கையில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதே வேளையில், பொதுமக்கள், குறிப்பாகப் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்குமாறும், ஆபத்தான பகுதிகளில் விளையாடுவதைத் தடுக்குமாறும் அமிருடின் கேட்டுக்கொண்டார்.
"உயிர் இழப்பை ஏற்படுத்தும் ஆபத்தான இடங்களில் குழந்தைகள் விளையாடுவதை பெற்றோர்கள் தடுத்து, விழிப்புடன் இருக்க வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, பண்டார் புஞ்சாக் ஆலமில் உள்ள லோரோங் சக்கரா பூர்ணாமா 12/27-இல் உள்ள கால்வாயில் தவறி விழுந்து காணாமல் போன சிறுவன், மூன்று நாள் தேடுதலுக்குப் பிறகு நேற்று சடலமாக மீட்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
10 வயதான கைரில் இசானியின் சடலம், மதியம் 1 மணியளவில் ஈஜோக், சுங்கை பூலோவிற்கு அருகிலுள்ள ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார், பாதிக்கப்பட்டவருக்கான தேடல் மற்றும் மீட்புப் பணி (SAR) மூன்றாவது நாளாகத் தொடர்ந்ததாக முன்னதாகக் கூறியிருந்தார்.
புஞ்சாக் ஆலமில் சிறுவன் தவறி விழுந்து கால்வாய்க்கு வேலி மற்றும் முடிகள் பொருத்தப்படும்- மந்திரி புசார்
2 மே 2026, 5:30 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
கெஅடிலான் தேர்தல் பணிகள் முழுமையாக அமிரூதின் தலைமையில் இயங்கும்
Media Selangor Team
16 ஆகஸ்ட் 2026

selangor
சிலாங்கூர் உணவுக் கிடங்கில் 8,000 டன் அரிசி இருப்பு: 3 மாதத் தேவையைப் பூர்த்தி செய்யும்
Norrasyidah Arshad
13 ஆகஸ்ட் 2026

selangor
RM500 பில்லியன் பொருளாதாரத்தைத் தாண்டிய முதல் மாநிலமாக சிலாங்கூர் திகழவிருக்கிறது
Media Selangor
11 ஆகஸ்ட் 2026

selangor
சமூக ஊடகங்களில் வெளியாகும் புகார்கள் ; ஊராட்சி மன்றங்கள் விரைந்து செயல்பட வேண்டும்
Dewi Abdul Rahman
8 ஆகஸ்ட் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?




