கோலாலம்பூர் ஏப் 7; பகுதி நேர வேலை மோசடிகளில் 10,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதுடன், மொத்தமாக 251 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
'லைக்', 'ஷேர்' செய்வது அல்லது ஆன்லைனில் பொருட்களை வாங்குவது போன்ற எளிதான பகுதி நேர வேலைகளை வழங்குவதாகக் கூறி, கூடுதல் வருமானம் தேடும் பொதுமக்களை ஏமாற்றும் தந்திரம் அதிகரித்து வருகிறது என்று புக்கிட் அமான் வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறை (JSJK) இயக்குனர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.
ஜனவரி 2025 முதல் இந்த ஆண்டு மார்ச் 15 வரையிலான 15 மாத காலத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தக் கால கட்டத்தில் மொத்தம் 10,304 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 251.2 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், சிலாங்கூர் மாநிலம் 2,684வழக்குகளுடன் (RM80.18 மில்லியன் இழப்பு) அதிகபட்ச எண்ணிக்கையையும், கோலாலம்பூர் 1,170 வழக்குகளையும் (RM36.47 மில்லியன் இழப்பு), ஜொகூர் 1,443 வழக்குகளையும் (RM27.31 மில்லியன் இழப்பு) பதிவு செய்துள்ளன.
"இந்த மோசடிக் கும்பல்கள் சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் மூலம் பாதிக்கப் பட்டவர்களை அணுகுகின்றன. கமிஷன் பெறுவதற்காக முன்பணம் அல்லது 'டாப்-அப்' செய்யுமாறு பாதிக்கப்பட்டவர்கள் கேட்கப்படுகின்றனர். இறுதியில் எந்தவொரு வருமானத்தையும் பெறாமல் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்," என்று அவர் கூறினார்.
வயது வாரியாகப் பார்க்கும்போது, 2025-ஆம் ஆண்டில் 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே (3,006 பேர்) அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து 31 முதல் 40 வயதுடையவர்கள் (2,665 பேர்) உள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 15 வரை, 31 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் (435 பேர்) அதிகபட்சமாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து 21 முதல் 30 வயதுடையவர்கள் (388 பேர்) உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெண்களே பெரும்பான்மையாக உள்ளனர். 2025-இல் 6,734 பெண்களும், 2026-இன் தொடக்கத்தில் 930 பெண்களும் இந்த மோசடிகளில் சிக்கியுள்ளனர்.
தனியார் துறை ஊழியர்களே (4,951 பேர்) இந்த மோசடிகளில் அதிகம் சிக்கும் குழுவாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். வேலையில்லாதவர்கள் (2,523 பேர்), மாணவர்கள் (864 பேர்), மற்றும் அரசு ஊழியர்கள் (717 பேர்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
"குறுகிய காலத்தில் அதிக வருமானம் ஈட்டலாம் என்ற வாக்குறுதி அளிக்கும் ஆன்லைன் வேலை வாய்ப்புகளை நம்பி, குறிப்பாக தனியார் துறையில் பணிபுரிபவர்களை இந்த மோசடிக் கும்பல்கள் குறிவைக்கின்றன," என்று ருஸ்டி மேலும் கூறினார்.
சந்தேகத்திற்கிடமான ஆன்லைன் வேலை வாய்ப்புகள், குறிப்பாக முன்பணம் அல்லது தொடக்க முதலீடு தேவைப்படும் சலுகைகள் குறித்து பொதுமக்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
https://mediaselangor.com/ms/2026/04/350953
பகுதி நேர வேலை மோசடிகளில் 10,000-க்கும் மேற்பட்ட புகார்கள் , 251 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
7 ஏப்ரல் 2026, 6:53 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
ஆபாச வீடியோ விற்பனை மோசடிக் கும்பல்: சீன நாட்டினர் நால்வர் கைது
Pakiya
1 மே 2026

national
ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் நீண்டகால இடையூறுகள் உலகளாவிய உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்
Shalini Rajamogun
28 ஏப்ரல் 2026

national
2027 சீ விளையாட்டுப் போட்டிகளுக்கான ஓர் ஆயத்தப் போட்டியாக சுக்மா 2026 திகழ்கிறது
Shalini Rajamogun
28 ஏப்ரல் 2026

national
புவிசார் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதார முன்னுரிமைகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் - பிரதமர்
Shalini Rajamogun
27 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




