புக்கிட் மெர்தாஜாம், மார்ச் 13: பள்ளிகள் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி தேவாலயத்தில் நடத்தப்பட்டதாக அவதூறு பரப்பியவர்கள் முன்வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் வலியுறுத்தியுள்ளார். அந்த அறிக்கை உண்மைக்குப் புறம்பானது என்றும், சமூகத்தில் தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
பரவி வரும் இந்த குற்றச்சாட்டு, குறிப்பாக இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இவ்வேளையில், நல்லிணக்கத்தைக் குலைக்கும் என்று ஃபத்லினா கூறினார்.
"கல்வி அமைச்சு (KPM) தேவாலயத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியதாகக் கூறும் அவதூறு அறிக்கை பற்றிய புகார் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இது சமூகத்தில் தவறான புரிதலை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில், அந்த நிகழ்ச்சி ஒரு அனைத்துலகப் பள்ளியில் நடைபெற்றது. அது தனியார் பள்ளி அல்லது மழலையர் பள்ளிகளின் பங்களிப்பாளர்களுடன் தொடர்புடைய ஒரு ஈடுபாட்டு அமர்வாகும்," என்றார்.
"அந்த அமர்வு ஒரு மண்டபத்தில் நடைபெற்றது, குற்றம் சாட்டப்பட்டது போல் தேவாலயத்தில் அல்ல. இது ரமலான் மாதம் என்பதால், நல்லிணக்கத்தைக் குலைத்து, மக்களிடையே கோபத்தையும் தவறான புரிதலையும் தூண்டும் எந்தவொரு அவதூறையும் செய்தியையும் அனுமதிக்க முடியாது," என்று அவர் இன்று இரவு செய்தியாளர்களிடம் கூறினார்.
2026 ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சின் மடாணி நோன்பு துறப்பு மற்றும் இஹ்யா ரமலான் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்வி துணை அமைச்சர் வோங் கா வோவும் கலந்து கொண்டார்.
நிபோங் தெபால் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபத்லினா, புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஒரு தேவாலயத்தில் KPM உடன் தனியார் மழலையர் பள்ளிகளை உள்ளடக்கிய நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய குற்றச்சாட்டு குறித்து கருத்து கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இதுவரை, தங்கள் தரப்பு பொதுமக்களுக்கு உண்மையை விளக்கும் அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதாகவும், அவதூறு பரப்புவோரின் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் அவர் கூறினார்.
"அந்த ஈடுபாட்டு அமர்வில் பல பங்களிப்பாளர்கள் கலந்து கொண்டனர். அது ஒரு சிறந்த வசதிகளைக் கொண்ட மண்டபத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலும் சிறப்பாகவே இருந்தது. எனவே, அக்குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது," என்றார்.
முன்னதாக, சமூக ஊடகங்களில் பரவியதைப் போல், நேற்று நடைபெற்ற வடக்கு மண்டல தனியார் மழலையர் பள்ளி பங்களிப்பாளர்களுடனான ஈடுபாட்டு அமர்வு தேவாலயத்தில் நடத்தப்படவில்லை என்று கல்வி அமைச்சு மறுத்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டு குறித்து வருத்தம் தெரிவித்த கல்வி தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது அஸாம் அகமது, அந்த அமர்வு, அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட புக்கிட் மெர்தாஜாமில் உள்ள அசம்ப்ஷன் அனைத்துலக உயர்நிலைப் பள்ளியின் மண்டபத்தில் நடத்தப்பட்டது என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
கிடைக்கக்கூடிய வசதிகள் மற்றும் நாட்டின் தனியார் கல்விச் சூழலின் ஒரு பகுதியாக அனைத்துலகப் பள்ளிகளின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தும் நோக்கம் உட்பட பல காரணிகளின் அடிப்படையில் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டதாக அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
-- பெர்னாமா
தேவாலயத்தில் KPM ஈடுபாட்டுத் திட்டம் என குற்றச்சாட்டு, அவதூறு பரப்புவோர் மன்னிப்புக் கேட்க ஃபத்லினா வலியுறுத்தல்
14 மார்ச் 2026, 3:40 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு 16 வயது குறைந்தபட்ச வரம்பு குழந்தைகளின் டிஜிட்டல் அணுகலைத் தடுக்கும் முயற்சியாகக் கருதப்படக்கூடாது.
Pakiya
26 ஏப்ரல் 2026

national
தெற்கு தாய்லாந்து சந்தைக்கான ஒரு மூலோ-பாய வட்டார மையமாக மேம்படுத்தப்படும் ஆற்றலைக் கொண்டுள்ளது, கோத்தா பாரு விமான நிலையம்.
Pakiya
18 ஏப்ரல் 2026

national
டீசல் மானியம் மும்மடங்கு உயர்வு, மாதம் ஒன்றுக்கு RM2.2 பில்லியனை எட்டியது
Pakiya
5 ஏப்ரல் 2026

national
சாலை விபத்தில் தந்தையை இழந்த இரண்டு சிறுவர்களை யாயாசான் பெலாஜாரான் மாரா கல்விப் பாதுகாவலராக ஏற்றுக் கொண்டுள்ளது
Pakiya
1 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




