ஷா ஆலம்: சிலாங்கூர் சுல்தான், மாட்சிமை தங்கிய சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் படத்தைத் திருத்தி, உணர்ச்சிகரமான உள்ளடக்கத்தைப் பரப்ப போலி கணக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியத்தை அதிகாரிகள் நிராகரிக்கவில்லை.
ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளரான டத்தோ ஃபஹ்மி ஃபட்சில், விசாரணைக்கு உதவுவதற்காக மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தால் (MCMC) ஒரு நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப் பட்டுள்ளதாகக் கூறினார்.
அவரது கூற்றுப்படி, மதம், இனம் மற்றும் அரசமைப்பு (3R) தொடர்பான உள்ளடக்கத்தின் கீழ் இந்த விசாரணை வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் பரவிய அந்த உள்ளடக்கத்தைப் பதிவேற்றுவதில் தமக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அந்த நபர் மறுத்ததாக ஃபஹ்மி குறிப்பிட்டார்.
"தற்போது, சம்பந்தப்பட்ட நபரின் மறுப்பு உட்பட எழுப்பப்பட்ட சில விஷயங்களை உறுதிப்படுத்த, டிஜிட்டல் தடயவியல் பகுப்பாய்வை மேற்கொள்வதற்காக MCMC, மெட்டா மற்றும் ராயல் மலேசிய காவல்துறை (PDRM) ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது."
"பொதுமக்களின் கோபத்தைத் தூண்டும் நோக்கத்துடன், ஆத்திரமூட்டும் முகவர்களால் போலிக் கணக்குகள் உருவாக்கப் பட்டதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது," என்று கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற வாராந்திர செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
சிலாங்கூர் சுல்தான் மீதான இந்த அவமதிப்பு படம் தொடர்பாக, 'Huayan The Pureland Learning Centre' என்ற பெயரில் இயங்கும் பேஸ்புக் கணக்கின் உரிமையாளர் அல்லது நிர்வாகி அடையாளம் காணப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (JSJ) இயக்குனர் டத்தோ எம். குமார் முன்னதாக தெரிவித்திருந்தார்.
சிலாங்கூர் சுல்தானை அவமதித்தது: படத்தைத் திருத்திய நபர் போலி கணக்கைப் பயன்படுத்தியதாக சந்தேகம்
30 ஏப்ரல் 2026, 3:04 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
இளையோரின் மனநலனைப் பாதுகாக்க சமூக ஊடகங்களில் வயது கட்டுப்பாட்டு விதிமுறை அமல் - மந்திரி புசார் பாராட்டு
Shalini Rajamogun, Fitri Hazim Hazam
3 ஜூன் 2026

national
சிறுவர் & இணையப் பாதுகாப்பு: எஸ்கேஎம்எம் (SKMM) 37 கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தியது
Shalini Rajamogun
27 மே 2026

selangor
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய பெண்ணுக்கு அபராதம்
Shalini Rajamogun
19 மே 2026

national
சட்டவிரோதக் குடியேறிகளைப் பாதுகாத்ததாகப் புகார்: 11,000 ரிங்கிட் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது
Pakiya
22 ஏப்ரல் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



