கோலாலம்பூர், ஏப்ரல் 21: உலகளாவிய விநியோக நெருக்கடியின் தாக்கத்தால் வேலை வாய்ப்புகளை இழந்தவர்களுக்கு உதவும் நோக்கில், அரசாங்கம் விரைவில் கூடுதல் நடவடிக்கைகளை அறிவிக்கும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா முடித்தவர்கள் உட்பட, வேலை தேடுவதில் சிரமங்களை எதிர் கொள்ளும் குழுவினருக்கு இந்த நடவடிக்கைகள் உதவும் என்றும், அவர்களின் திறன்கள் வீணடிக்கப் படாமல் இருப்பதை இது உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.
"வேலை வாய்ப்புகளிலிருந்து ஒதுக்கப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பட்டதாரிகள் போன்ற குழுவினருக்கு கூடுதல் நடவடிக்கைகளை நான் விரைவில் அறிவிப்பேன்," என்று நிதிக் கழகங்களுடனான வட்டமேசை அமர்வுக்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இன்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பேங்க் நெகாரா ஆளுநர் டத்தோஸ்ரீ அப்துல் ரஷீத் காஃபூர் மற்றும் திறைசேரியின் தலைமைச் செயலாளர் டத்தோ ஜோஹான் மஹ்மூத் மெரிக்கான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, உலகளாவிய விநியோக நெருக்கடியின் விளைவுகளைச் சமாளிக்க மக்களுக்கு உதவும் வகையில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அவற்றில், புடி மடாணி RON95 (BUDI95) திட்டத்தின் கீழ் பெட்ரோல் விலையை நிலை நிறுத்துதல் மற்றும் சபா, சரவாக்கிற்கு டீசல் மானியத்தைத் தொடர்வது ஆகியவை அடங்கும்.
தனிநபர் டீசல் வாகன உரிமையாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு தோட்ட காரர்களுக்கான புடி டீசல் மற்றும் விவசாயப் பொருள் மாதாந்திர உதவி விகிதங்களை உயர்த்துதல், நெல் விவசாயிகளுக்கு உழவு ஊக்கத்தொகை (IPKP) அதிகரிப்பு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (PMKS) உதவ 5 பில்லியன் ரிங்கிட் வரை நிதி உத்தரவாதம் வழங்குதல் போன்றவையும் இதில் அடங்கும்.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பிப்ரவரி 2026-இல் மலேசியாவின் வேலையின்மை விகிதம் 2.9 விழுக்காடாக இருந்தது, வேலையற்றோர் எண்ணிக்கை 506,800 ஆகப் பதிவாகியுள்ளது.
உலகளாவிய நெருக்கடியின் தாக்கத்தால் வேலை வாய்ப்புகளை இழந்தவர்களுக்கு உதவும் திட்டத்தை அரசாங்கம் விரைவில் அறிவிக்கும்
21 ஏப்ரல் 2026, 10:09 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
video
PM to take charge of issues affecting Indian community
Kathiravan Manoharan
30 ஜூலை 2026

national
BUDI95: மீண்டும் 300 லிட்டராகிறது எரிபொருள் ஒதுக்கீடு
Media Selangor Team
30 ஆகஸ்ட் 2026

national
ஜோ லோவுக்கு மன்னிப்பு இல்லை -அன்வார்
Pakiya
15 மே 2026

national
SST-யுடன் GST அம்சங்களை இணைக்கும் வரி முறை குறித்து விரிவான ஆய்வு தேவை: பிரதமர்
Media Selangor Team
20 ஆகஸ்ட் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



