பெண்ணை மடியில் அமர வைத்து ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டிய நபர் மற்றும் சம்பந்தப்பட்ட பெண்ணையும் போலீஸ் தேடி வருகிறது  

14 ஏப்ரல் 2026, 3:26 AM
பெண்ணை மடியில் அமர வைத்து ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டிய நபர் மற்றும் சம்பந்தப்பட்ட பெண்ணையும் போலீஸ் தேடி வருகிறது  

ஜாசின், ஏப்ரல் 14: வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் (PLUS) பெண்ணொருவரை மடியில் அமரவைத்து ஆபத்தான முறையில் விரைவுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநரையும், சம்பந்தப்பட்ட பெண்ணையும் போலீஸ் தேடி வருகிறது. இது தொடர்பான காணொலி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ஜாசின் மாவட்ட காவல் துறைத் தலைவர் கண்காணிப்பாளர் லீ ராபர்ட் கூறுகையில், முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட எட்டு வினாடிகள் கொண்ட அந்த காணொலியில், ஓட்டுநரின் மடியில் ஒரு பெண் அமர்ந்திருக்க, பேருந்து நகர்ந்து கொண்டிருப்பது பதிவாகியுள்ளது என்றார்.

"ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி இரவு 7.30 மணியளவில், தெற்கு நோக்கிச் செல்லும் பெம்பான் ஓய்வு மற்றும் சேவைப் பகுதி (R&R) நுழைவாயிலுக்கு அருகே நடந்ததாக நம்பப்படுகிறது. இந்த காணொலி ஏப்ரல் 13ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் போலீசாரின் கவனத்திற்கு வந்தது," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

"எனவே, இந்த காணொலியில் சம்பந்தப்பட்ட இருவரும் விசாரணைக்கு உதவுவதற்காக சின் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவில் (BSPT) உடனடியாக சரணடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."

இந்தச் செயல் மிகவும் ஆபத்தானது என்றும், இது வாகனத்தின் கட்டுப்பாட்டை பாதிக்கும், ஓட்டுநரின் கவனத்தை சிதறடிக்கும், மேலும் பயணிகள் மற்றும் பிற சாலைப் பயனர்களின் பாதுகாப்பிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் லீ ராபர்ட் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 42(1)வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் மர்வான் ஷாபிக் முகமட் லட்பியை 011-11127533 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்லலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.