2030-ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவையில் 100 விழுக்காடு மின்சாரப் பேருந்துகளின் (EV) பயன்பாடு - அரசு இலக்கு

13 ஏப்ரல் 2026, 1:20 AM
2030-ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவையில் 100 விழுக்காடு மின்சாரப் பேருந்துகளின் (EV) பயன்பாடு - அரசு இலக்கு

ஷா ஆலம், ஏப்ரல் 13: 2030-ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவையில் 100 விழுக்காடு மின்சாரப் பேருந்துகளின் (EV) பயன்பாட்டை உறுதிசெய்ய சிலாங்கூர் அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

மாநிலத்தின் தூய்மையான போக்குவரத்துத் திட்டத்தை விரைவுபடுத்தும் நோக்கில், 2028-ஆம் ஆண்டுக்குள் 50 விழுக்காடு மின்சாரப் பேருந்து சேவையை எட்டுவதையும் இலக்காகக் கொண்டுள்ளதாகப் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சீ ஹான் கூறினார்.

"உலகளாவிய புவிசார் அரசியல் சவால்கள் மற்றும் நிச்சயமற்ற எண்ணெய் விலைகளை எதிர்கொள்ள, சிலாங்கூர் மேலும் மீள்தன்மை கொண்ட மாநிலமாக மாற வேண்டும்."

"நாம் பசுமைப் போக்குவரத்தை நோக்கி மேலும் முன்னேற வேண்டும். ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து முயற்சிக்கு, நாங்கள் தெளிவான இலக்குகளை நிர்ணயித்துள்ளோம்," என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.

அதே வேளையில், சுபாங் ஜெயாவில் 15, உலு சிலாங்கூரில் ஐந்து, ஷா ஆலமில் நான்கு, கிள்ளானில் ஒன்று மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் ஒன்று என மொத்தம் 26 மின்சாரப் பேருந்துகள் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளதாக சீ ஹான் தெரிவித்தார்.

"டீசலைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது தூய்மையான காற்றை உறுதி செய்வதற்கு மட்டுமல்ல, சிலாங்கூரின் பொருளாதார மீள்தன்மையை வலுப்படுத்தவும், நாட்டின் ஆற்றல் மாற்றத் திட்டத்தில் மாநிலம் தொடர்ந்து முன்னணியில் இருப்பதை உறுதி செய்யவும் இது அவசியமானதாகும்," என்று அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.