சிலாங்கூர் மாநில உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்களே அவகாசம்

12 ஏப்ரல் 2026, 9:16 AM
சிலாங்கூர் மாநில உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்களே அவகாசம்

ஷா ஆலம், ஏப்ரல் 12: சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், மாநில அரசு வழங்கும் உயர்கல்வி நிறுவன (IPT) கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய உள்ளதால், அதனை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளுக்கான மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் அறிக்கையில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொது மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் முதலாம் ஆண்டு கல்வியைத் தொடங்கும் மாணவர்களுக்கு, இந்தத் திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி நிதியுதவி வழங்கப்படுகிறது.

குறிப்பாக, மாணவர்கள் தங்களின் உயர்கல்வியைத் தொடங்குவதற்குத் தேவையான ஆரம்பக்கட்டச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டம் நான்காம் நிலை (Level 4) திறன் சான்றிதழ், டிப்ளோமா மற்றும் இளங்கலைப் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்குப் பொருந்தும் என்று அவர் விளக்கமளித்தார்.

மேலும், இந்த ஆண்டு இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டைச் சிலாங்கூர் மாநில அரசு 3 மில்லியன் வெள்ளியிலிருந்து 5 மில்லியன் வெள்ளியாக உயர்த்தியுள்ளது.

இதன் மூலம் மாநிலத்தின் அதிகமான மாணவர்கள் பயனடைவதை அரசு உறுதி செய்துள்ளதாக இங் ஸீ ஹான் குறிப்பிட்டார். தகுதியுள்ள மாணவர்கள் சிலாங்கூர் கல்வி நிதியத்தின் (Dana Pendidikan Selangor) அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக இணையம் வழியாகவே தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

எனவே, இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாமல் மாணவர்கள் பயன்படுத்தி, தங்களின் உயர்கல்விப் பயணத்தை தொடங்குமாறு அவர் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.