ஷா ஆலாம், ஏப்ரல் 10: சிறுவர் பாலியல் குற்றச்சாட்டில் தண்டனைக்கு காத்திருக்கும் சுங்கை பூலோ சிறைச்சாலை கைதி, அங்கிருந்து தப்பி ஓட்டம். தப்பியோடியவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நேற்று நிகழ்ந்ததாக சுங்கை பூலோ மாவட்ட காவல் துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் ஹபீஸ் முஹம்மது நூர் தெரிவித்தார். தப்பியோடிய சந்தேக நபர், 24 வயதான பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகமது ஹசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் மீது தண்டனைச் சட்டத்தின் 377 C மற்றும் 392 பிரிவுகளின் கீழும், 2017ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் (AKSTKK) 14(a) பிரிவின் கீழ் மூன்று குற்றச் சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
"மேலும், குடிநுழைவுச் சட்டம் 1959/63-இன் பிரிவு 15 (1) (C)-இன் கீழும் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளது," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.
"சந்தேக நபர் கடைசியாக ஆரஞ்சு நிற டி-சர்ட் மற்றும் கருப்பு நீளக்கால் சட்டை அணிந்திருந்தார்."
இந்தச் சம்பவம் குறித்த புகாரைப் பெற்றவுடன், போலீசார் அருகிலுள்ள பகுதிகளில் சந்தேக நபரைத் தேடும் முயற்சிகளைத் தீவிரப் படுத்தியுள்ளதுடன், பல்வேறு தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
"இந்தக் கைதி சிறுவர் பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர் என்பதால், பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்."
"சந்தேக நபரின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகேந்திரனை 010-4304383 என்ற எண்ணிலோ, அல்லது இன்ஸ்பெக்டர் அசாமுதீனை 016-5661597 என்ற எண்ணிலோ, அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.
சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பியோடிய சிறார் பாலியல் குற்றவாளியைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்
10 ஏப்ரல் 2026, 6:25 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
35 ஆண்டுகால சேவைக்குப் பின்னர் ஓய்வு பெற்றார் அயோப் கான்
Bernama
26 ஜூலை 2026

selangor
பகடிவதை சம்பவங்களைத் தடுக்க பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் - கிள்ளான் மாவட்டக் காவல்துறை
Shalini Rajamogun
15 ஜூலை 2026

national
கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையில் கூடுதல் வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்; சுற்றுலாத்துறை அமைச்சர் வலியுறுத்தல்
Shalini Rajamogun
10 ஜூன் 2026

national
புக்கிட் சாங்காட் ஆசாவில் மாயமான இளம் பெண் சடலமாக மீட்பு
Shalini Rajamogun
26 மே 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



