புத்ராஜெயா, ஏப்ரல் 8 : பூடி மடாணி RON95 (பூடி95) மானிய வரம்பை அதிகரிப்பதற்கான பொது விண்ணப்பங்கள் தொடர்பான கூற்றுகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று நிதி அமைச்சு (MOF) தெரிவித்துள்ளது.
பூடி95 திட்டத்தின் ஆரம்பத்தில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டிருந்தாலும், அது தனிப்பட்ட தேவைகளுக்காகக் கூடுதல் விண்ணப்பம் செய்வதற்கானது அல்ல என்று அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"மாறாக, அது இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் போன்ற, உறுதிப்படுத்தப்பட்ட செயல்பாட்டுத் தேவைகளைக் கொண்ட குறிப்பிட்ட தரப்பினருக்காக, நிர்ணயிக்கப்பட்ட தகுதிவிதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டதாகும்."
"பூடி95 இணையதளத்தில் உள்ள கூடுதல் விண்ணப்ப அம்சம், தகுதி வரம்பை சுதந்திரமாக அதிகரிக்கக் கோரும் ஒரு வழியாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அந்த விண்ணப்பப் பொத்தான் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான மக்களுக்கு மானியம் சென்றடைவதையும், விநியோகம் சீராக இருப்பதையும் உறுதி செய்வதற்காக, பூடி95-க்கான மாதத்திற்கு 200 லிட்டர் என்ற தகுதி வரம்பு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று நிதி அமைச்சு தெரிவித்தது.
"தொடர்ச்சியான உலகளாவிய எரிசக்தி சந்தை அழுத்தங்கள் காரணமாக இந்த தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மானியச் செலவுகளை அதிகரித்து, மேலும் விவேகமான நிர்வாகத்தை அவசியமாக்குகிறது," என்று அமைச்சு குறிப்பிட்டது.
இதற்கிடையில், பூடி95 பயனர்களில் 90 விழுக்காட்டினருக்கு 200 லிட்டர் வரம்பு போதுமானதாக உள்ளது என்று புள்ளிவிவரங்கள் காட்டுவதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்தது.
ஒரு லிட்டருக்கு RM1.99 என்ற மானிய விலையில், பயனர்கள் மாதத்திற்கு RM398 வரை RON95 பெட்ரோலை வாங்க முடியும். இதில் ஒவ்வொரு பயனாளருக்கும் அரசாங்கம் சுமார் RM500 மானியத்தை வழங்குகிறது.
"அரசாங்கம் தொடர்ந்து மக்களைப் பாதுகாக்கும், கசிவுகளைத் தடுக்க அமலாக்கத்தை வலுப்படுத்தும், மேலும் உலகளாவிய எரிசக்தி சந்தையை உன்னிப்பாகக் கண்காணித்து, தேவைக்கேற்ப உரிய மாற்றங்களைச் செய்யத் தயாராக இருக்கும்," என்று நிதி அமைச்சு தெரிவித்தது.
பூடி மடாணி RON95 மானிய வரம்பை அதிகரிப்பதற்கான விண்ணப்பங்கள் தொடர்பான கூற்றுகள் முற்றிலும் பொய்யானவை
8 ஏப்ரல் 2026, 1:34 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
சர்வதேச சந்தை வீழ்ச்சியால் எரிபொருள் விலை சரிவு
Shalini Rajamogun
1 ஜூலை 2026

video
Harga petrol RON97 turun 30 sen, diesel dan RON95 susut 20 sen minggu ini
Kathiravan Manoharan
4 ஜூன் 2026

national
RON97, மானிய உதவியில்லாத RON 95 மற்றும் டீசல் விலை உயர்வு
Pakiya
21 மே 2026

selangor
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய பெண்ணுக்கு அபராதம்
Shalini Rajamogun
19 மே 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?


