கோலாலம்பூர், ஏப்ரல் 7 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) சொத்து அறிவிப்பு நோட்டீசுக்கு இணங்கத் தவறிய குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக, முன்னாள் நிதி அமைச்சர் மறைந்த துன் டயிம் சைனுடினின் மகள் இன்று கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் ஆஜரானார்.
அடர் நீல நிற சட்டை அணிந்திருந்த அஸ்னிடா அப்துல் டயிம், காலை 8.40 மணியளவில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தார்.நீதிமன்ற அமைப்பு முறை பதிவுகளின் அடிப்படையில், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லி அகமது முன்பாக காலை 9 மணியளவில் அவர் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்படும்.நேற்று, அஸ்னிடாவைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் யூ யிங் யிங், எம்.ஏ.சி.சி சட்டம் 2009-இன் பிரிவு 36(2)-இன் கீழ் தனது கட்சிக்காரர் மீது குற்றம் சாட்டப்படும் என்று எம்.ஏ.சி.சி. தெரிவித்ததாக ஊடகங்களிடம் கூறினார்.
எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் நேற்று காலை 10 மணி முதல் சுமார் ஐந்து மணி நேரம் அஸ்னிடாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் யூ ஊடகங்களுக்குத் தெரிவித்தார்








