ஷா ஆலம், ஏப்ரல் 6: 2026: சிலாங்கூர் மலேசிய விளையாட்டுப் போட்டிகளின் (சுக்மா) செயலகத் தூதுக்குழு, இன்று வடக்கு மண்டலத்திற்கு அதிகாரப்பூர்வ அழைப்பிதழ்களை வழங்கும் மரியாதைக்குரிய பயணத்தைத் தொடர்ந்தது.
விளையாட்டுப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி தலைமையிலான இக்குழு, பெர்லிஸ் மற்றும் கெடா மாநிலங்களு- க்குச் சென்றது. இதன் மூலம், அவர்கள் முறையே ஐந்தாவது மற்றும் ஆறாவது மாநிலங்களுக்கு வருகை புரிந்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சுக்மா 2026, ஆகஸ்ட் 14 முதல் 25 வரை நடைபெற உள்ளது.
சிலாங்கூர் சுக்மா ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான முகமட் நஜ்வான், சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மாநிலத்திற்கும் மேற்கொள்ளப்படும் இந்த வருகை, ஒவ்வொரு சுக்மா ஏற்பாட்டின் போதும் கடைப்பிடிக்கப்படும் ஒரு பாரம்பரியம் மற்றும் சம்பிரதாயம் என்று கூறினார்.
"மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக உலகளாவிய நிச்சயமற்ற தன்மை குறித்த கவலைகள் இருந்தபோதிலும், இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சீராக நடைபெற்று வருவதாக நான் உறுதியளிக்கிறேன்," என்றார்.
"குறிப்பாக எரிபொருள் சம்பந்தப்பட்ட தளவாடச் செலவுகள் அதிகரிப்பது குறித்த பிரச்சினையை, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் டாக்டர் முகமது தௌபிக் ஜொஹாரி தலைமையில் நடைபெறும் சுக்மா உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் சிலாங்கூர் சுக்மா செயலகம் முன்வைக்கும்."
"எந்த தாமதமும் இன்றி சிலாங்கூர் சுக்மாவைத் தொடர்ந்து நடத்துவதற்கு மற்ற மாநிலங்களின் ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக, பெர்லிக்கு வருகை தந்த முகமட் நஜ்வான் மற்றும் அவரது தூதுக்குழுவை, அம்-மாநிலத்தின் இளைஞர் மற்றும் விளையாட்டு, சமூகம், டிஜிட்டல், போக்குவரத்து, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் வான் சிக்ரி அப்தார் இஷாக் வரவேற்றார்.
அதே போன்று கெடாவின் நுகர்வோர் மற்றும் வாழ்க்கைச் செலவு, இளைஞர் மற்றும் விளையாட்டுக்கான குழுத் தலைவர் முஹமட் ராதி மாட்டின் அவர்களை வரவேற்றார்.
முகமட் நஜ்வானுடன் சுக்மா செயலகத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ முகமட் யாசிட் சைரி மற்றும் சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றத்தின் நிர்வாக இயக்குநர் முகமது நிஜாம் மர்ஜுகி ஆகியோரும் சென்றிருந்தனர்.
22-வது சுக்மா போட்டிகள் ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறவிருக்கின்றன. அதன் தொடக்க விழா சிப்பாங் அனைத்துலக கார் சுற்றோட்டப் பாதையில் (SIC) நடைபெறும். பாரா சுக்மா செப்டம்பர் 5 முதல் 10 வரை திட்டமிடப் பட்டுள்ளது.
மொத்தம் 37 வகையான விளையாட்டுகளில் 474 நிகழ்வுகள் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 52 போட்டி இடங்களில் நடத்தப்படும். பாரா சுக்மாவில் 10 வகையான விளையாட்டுகளில் 316 நிகழ்வுகள் பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்டங்களில் நடைபெறும்.
இதற்கு முன்பு, சிலாங்கூர் சுக்மா 2026 தூதுக் குழு சரவாக், சபா, கிளாந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களுக்குச் சென்றுள்ளது.
சிலாங்கூர் சுக்மா தூதுக்குழு பெர்லிஸ், கெடாவிற்கு வருகை; அதிகாரப்பூர்வ அழைப்பு வழங்கப்பட்டது
7 ஏப்ரல் 2026, 1:12 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
sukankini
சிறிய அளவில் 2026 சிலாங்கூர் சுக்மா தொடர சபா நம்பிக்கை
Pakiya
25 ஏப்ரல் 2026

video
SUKMA 2026: Bekalan makanan cukup walau harga dijangka naik
Kathiravan Manoharan
19 மே 2026

video
SUKMA 2026: Kunjungan hormat ke Johor, Selangor serah jemputan rasmi
Kathiravan Manoharan
6 மே 2026

video
SUKMA 2026: Kontinjen Selangor hargai perkenan sultan, tekad raih juara keseluruhan
Kathiravan Manoharan
27 ஏப்ரல் 2026

வகைsukankini
உங்கள் கருத்து என்ன?



