மாட்சிமை தங்கிய சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா மற்றும் துணைவியார்  மக்களுக்கு  இனிய ஹரி ராயா ஈகைத் திருநாள் நல் வாழ்த்து தெரிவித்தனர்

19 மார்ச் 2026, 6:14 AM
மாட்சிமை தங்கிய சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா மற்றும் துணைவியார்  மக்களுக்கு  இனிய ஹரி ராயா ஈகைத் திருநாள் நல் வாழ்த்து தெரிவித்தனர்

ஷா ஆலாம்: மாட்சிமை தங்கிய சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா, அவரது துணைவியாருடன் இணைந்து அனைத்து சிலாங்கூர் மக்களுக்கும் தங்களது இனிய ஹரி ராயா ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

இளவரசரும், மாண்புமிகு டத்தின் படுக்கா செரி அஃப்ஸா ஃபதினி டத்தோ அப்துல் அசிஸும், இந்த ஆண்டு ஷவ்வால் மாதம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், ஆசீர்வாதத்தையும் கொண்டு வருவதுடன், மக்கள் ஒற்றுமையை வலுப் படுத்தும் என்று நம்புவதாகக் கூறினர்.

தமது முகநூல் பதிவின் வாயிலாக, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்து உறவுகளைப் பேணும் நற்பண்பை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று இளவரசர் கேட்டுக் கொண்டார்.

"குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களைச் சந்தித்து அன்பைப் பரிமாறிக், ஒருவருக்கொருவர் மன்னிப்புக் கோருவதன் மூலம் பண்டிகைக் கொண்டாட்டம் மேலும் அர்த்தமுள்ளதாக அமைகிறது."

"நானும் என் துணைவியாரும், நீங்கள் எங்கிருந்தாலும், அனைத்து சிலாங்கூர் மக்களுக்கும் இனிய ஹரி ராயா ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

"எனது மற்றும் எனது குடும்பத்தினரின் சலாத்தை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவியுங்கள்," என்று இளவரசர் மேலும் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.