தீ மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்த 'சியாப் சியாகா ராயா' பிரச்சாரம்

11 மார்ச் 2026, 3:58 AM
தீ மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்த 'சியாப் சியாகா ராயா' பிரச்சாரம்
தீ மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்த 'சியாப் சியாகா ராயா' பிரச்சாரம்

ஷா ஆலாம், மார்ச் 11: பண்டிகைக் காலங்களில் பாதுகாப்பு தரத்தை உகந்த நிலையில் உறுதி செய்வதற்காக, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM), 'சியாப் சியாகா ராயா' தீ பாதுகாப்பு பிரச்சாரத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை மேம்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.

வீட்டை விட்டு வெளியேறும் போதும் அல்லது சொந்த ஊர்களுக்குத் திரும்பும் போதும் பாதுகாப்பு அம்சங்களில் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குனர் டத்தோ வான் எம்.டி. ரசாலி வான் இஸ்மாயில் நினைவூட்டினார்.

நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தையொட்டி நகர்ப்புற வாசிகள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நேரத்தில், தீ தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்தப் பிரச்சாரம் முக்கியத்துவம் அளிப்பதாக அவர் கூறினார்.

"மின்சுற்றுப் பழுது காரணமாக ஏற்படும் தீ அபாயத்தை தவிர்க்க, வீட்டை விட்டு வெளியேறும் முன் பயன்படுத்தப் படாத அனைத்து மின் சாதனங்களின் இணைப்பைத் துண்டிப்பதை உறுதி செய்யுங்கள்," என்று நேற்று ஷா ஆலாம் AEON பேரங்காடி வளாகத்தில் புதிய தீயணைப்பு வாகனத்தை அறிமுகம் செய்தபோது அவர் கூறினார்.

அவசர கால சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு தயார் நடவடிக்கையாக, வாகனங்களில் குறைந்தது ஒரு கையடக்க தீயணைப்புக் கருவியை வைத்திருக்குமாறு பொது மக்களை அவர் ஊக்குவித்தார்.

சாலை விபத்துக்களால் வாகனங்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் நிகழ்வதால் இந்த நடவடிக்கை முக்கியமானது என்றார்.

அதே நேரத்தில், சுற்றியுள்ள பகுதிகளுக்கு தீ பரவக்கூடிய திறந்தவெளியில் எரிப்பதைத் தவிர்க்குமாறும் சமூகம் நினைவூட்டப்பட்டது.

இத்திட்டம் சிறுவர்களுக்கான வண்ணப் போட்டி, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மற்றும் சம்பந்தப்பட்ட பேரங்காடியில் உள்ள தீ பாதுகாப்பு அமைப்பு ஆய்வு போன்ற பல்வேறு சமூக நடவடிக்கைகளால் களைகட்டியது.

இந்நிகழ்ச்சியில், பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தீயணைப்பு படையினர் தயார் நிலையின் அடையாளமாக புதிய தீயணைப்பு வாகனத்தை கொடியசைத்துத் தொடங்கி வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.