ஷா ஆலாம், மார்ச் 17: கிள்ளானைச் சுற்றியுள்ள 80 ஆதரவற்றோர் மற்றும் சிறப்புத் தேவையுடைய குழந்தைகள், கிள்ளான் அரச நகர மன்றம் (எம்.பி.டி.கே) அண்மையில் கிள்ளான், சென்ட்ரோ வணிக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
எம்.பி.டி.கே-யின் நிறுவன தொடர்புத் துறை இயக்குநர் நோர்ஃபிஸா மஹ்ஃபிஸ் கூறுகையில், இந்த நிகழ்வு காவல்துறை உட்பட பல தரப்பினரின் ஒத்துழைப்புடன், வணிக வளாகத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) முயற்சியின் கீழ் செயல்படுத்தப்பட்டது என்றார்.
"தனியார் துறை, காவல்துறை மற்றும் எம்.பி.டி.கே இடையேயான இந்த ஒத்துழைப்பு, கிள்ளான் அரச நகரத்தில் மிகவும் வலுவான ஒற்றுமை உணர்வின் வெளிப்பாடாகும்."
"நமது நகரத்தின் சமூக நல்லிணக்கம் தொடர்ந்து பாதுகாக்கப் படுவதை உறுதிசெய்ய, இதுபோன்ற ஒருங்கிணைந்த முயற்சி நமக்குத் தேவை," என்று நகர மேயர் சார்பில் அந் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் கூறினார்.
அதே நிகழ்வில், நோன்புப் பெருநாளை முன்னிட்டு குடியிருப்பாளர்களை மகிழ்விப்பதற்காக, ஐந்து பராமரிப்பு மையங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு மையங்களுக்கு (பிடிகே) எம்.பி.டி.கே மொத்தம் 2,500 ரிங்கிட் நன்கொடையாக வழங்கியது.
ஹனீன் பிர்தௌஸ் பராமரிப்பு மையம், சாயாங் சிறப்புக் குழந்தைகள் பராமரிப்பு மையம், கோத்தா ராஜா கிள்ளான் பிடிகே, நுர் காசி இயக்கம் மற்றும் மதரஸா உலுமுல்குரான் வல் அஹாடித் ஆகியவையே அந்த ஐந்து மையங்களாகும்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்துக் குழந்தைகளும் கல்வியைத் தொடர்வதில் ஆர்வத்துடன் இருந்து, சமூகத்திற்குச் சேவை செய்து பயனளிக்க வேண்டும் என்றும் நோர்ஃபிஸா கேட்டுக்கொண்டார்.
"நீங்கள் அனைவரும் முழுமையாக வளர, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நட்புறவான நகரச் சூழலை வழங்க எம்.பி.டி.கே மட்டத்தில் நாங்கள் எப்போதும் முயற்சிப்போம்," என்று அவர் மேலும் கூறினார்.
கிள்ளானில் 80 ஆதரவற்றோர், சிறப்புத்தேவையுடைய சிறுவர்களுக்கு எம்.பி.டி.கே உபசரிப்பு
17 மார்ச் 2026, 5:57 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மீடியா சிலாங்கூர் CSR திட்டம் தன்னார்வலர்களை உருவாக்கி சமூக உணர்வை வளர்க்கிறது
Pakiya
29 நவம்பர் 2025

national
பள்ளி சிற்றுண்டிச்சாலைகளுக்கு முறையான உரிமம்: கிள்ளான் அரச மாநகர மன்றம் அதிரடி நடவடிக்கை
Shalini Rajamogun
19 ஜூலை 2026

national
சைபர் ஜெயா பூனைப் பூங்காவில் 235 பூனைகள் மீட்பு: தொண்டர்கள், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாக உருமாற்றம்
Pakiya
22 மே 2026

---
156 keluarga terima bantuan sempena Ramadan-MBSA
admin
3 ஜூன் 2016
வகைselangor
உங்கள் கருத்து என்ன?



