ஷா ஆலாம், மார்ச் 11: கோலாலம்பூர், ஜாலான் சிலாங் பகுதியில் மலேசிய குடிநுழைவுத்துறை (JIM) ஒரு சிறப்பு அளவிலான அமலாக்க ஆய்வுக் நடவடிக்கையை மேற்கொண்டது. அப்பகுதியில் உள்ள வெளிநாட்டினரின் நிலை குறித்த களக் கண்காணிப்பு நடவடிக்கையாக இது மேற்கொள்ளப் பட்டது.
வெளிநாட்டினர் அதிக அளவில் கூடும் பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகள் நடைபெறும் மையப்பகுதியில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இச்சோதனையில் பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, மியான்மர், சீனா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த 1,424 நபர்கள் பரிசோதிக்கப் பட்டதாக குடிநுழைவுத்துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"பரிசோதனையின் முடிவில், சோதிக்கப்பட்ட அனைவரும் நாட்டில் தங்குவதற்குரிய செல்லுபடியாகும் அனுமதி அட்டைகள் மற்றும் பயண ஆவணங்களைக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது,"
"இந்தச் சோதனையில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றாலும், முழுமையான மற்றும் விரிவான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது," என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.
குடிநுழைவுத்துறை தலைமையகத்தின் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த 52 அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் பங்கேற்றனர். குடி நுழைவுத் துறையின் துணைத் தலைமை இயக்குநர் (நடவடிக்கை) டத்தோ லோக்மான் எஃபெண்டி ரம்லி மற்றும் அமலாக்கப் பிரிவு இயக்குநர் பாஸ்ரி ஒத்மான் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நடவடிக்கை, வெளிநாட்டினருக்கான அனுமதி அட்டைகள் தவறாகப் பயன்படுத்தப் படவில்லை அல்லது வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைகள் மீறப்படவில்லை என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
"இந்த ஆய்வு ஒரு வழக்கமான நடவடிக்கை மட்டுமல்ல, மாறாக இது ஒரு தொடர்ச்சியான கண்காணிப்பு அணுகுமுறையாகும்."
"சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான சிக்கல்களை திறம்படக் கையாள்வதில் அமலாக்க நடவடிக்கைகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் இது உதவுகிறது," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. மேலும், இது போன்ற நடவடிக்கைகள் நாடு முழுவதும் சீராகவும் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்படும் என்றும் அது தெரிவித்தது.
ஜாலான் சிலாங்கில் நடந்த சோதனையில் 1,424 வெளிநாட்டினர் பரிசோதனை
11 மார்ச் 2026, 7:50 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
3 பேர் பலியான விபத்து:குடிநுழைவுத் துறை ஓட்டுநர் மீது 5 குற்றச்சாட்டுகள்
Bernama
20 ஆகஸ்ட் 2026

national
சிவப்பு சமிக்ஞையை மீறிய குடிநுழைவுத் துறையின் லாரி : 3 பாதசாரிகள் உயிரிழப்பு
Bernama
19 ஆகஸ்ட் 2026

selangor
வெளிநாட்டுத் தொழிலாளர் விநியோக கும்பல் சிக்கியது; வங்களாதேச முதலாளி உட்பட 7 பேர் கைது
Media Selangor Team
17 ஜூலை 2026

national
போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்திய 46 வெளிநாட்டினர் கைது
Shalini Rajamogun
9 ஏப்ரல் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?





