பயிற்சி மருத்துவர் மரணம்: 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு

10 மார்ச் 2026, 1:28 AM
பயிற்சி மருத்துவர் மரணம்: 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு

கோத்தா பாரு,  மார்ச் 10- கோல கிராயில் உள்ள சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனை (HSIP) தங்கும் விடுதி அறையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் சமீபத்தில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில், விசாரணைக்கு உதவுவதற்காக 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இதுவரை, பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உட்பட பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிளாந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமாட் தெரிவித்தார்.

"இதுவரை, இந்தச் சம்பவம் தொடர்பில் எந்தவொரு குற்றவியல் கூறும் கண்டறியப்படவில்லை. மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மரணத்திற்கான உண்மையான காரணத்தை அடையாளம் காணும் நோக்கில், மேலும் விரிவான விசாரணைக்காக இந்த வழக்கு கிளாந்தான் மாநில காவல்துறை தலைமையகத்தால் (IPK) கையகப்படுத்தப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை, சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் அறையொன்றில் அந்தப் பெண் பயிற்சி மருத்துவர் இறந்து கிடந்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.

காலை 9.55 மணியளவில் இச்சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும், அதன்பேரில் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கோல கிராய் காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கோல கிராய் மாவட்ட போலீஸ் தலைவர், சுப்ரிண்டெண்டன்ட் மஸ்லான் மாமாட் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.