எஸ்பிஎம் மாணவர்களுக்கான UPUOnline விண்ணப்பக் காலக்கெடு ஏப்ரல் 12 வரை நீட்டிப்பு

9 மார்ச் 2026, 8:10 AM
எஸ்பிஎம் மாணவர்களுக்கான UPUOnline விண்ணப்பக் காலக்கெடு ஏப்ரல் 12 வரை நீட்டிப்பு

புத்ராஜெயா, மார்ச் 9: 2026/2027 கல்வியாண்டிற்கான UPUOnline வழி விண்ணப்பிக்கும் எஸ்பிஎம் (SPM) மாணவர்களுக்கான காலக்கெடு ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி மார்ச் 23 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 2025-ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் வரும் மார்ச் 31-ஆம் தேதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்ததைத் தொடர்ந்து, உயர்கல்வி அமைச்சு இந்த நீட்டிப்பை வழங்கியுள்ளது.

இருப்பினும், எஸ்டிபிஎம் (STPM) அல்லது அதற்கு இணையான தகுதியுடையவர்களுக்கான முதற்கட்ட விண்ணப்பக் காலக்கெடு மாற்றமின்றி மார்ச் 23-லேயே முடிவடையும்.

 விண்ணப்பிக்க விரும்பும் எஸ்பிஎம் மாணவர்கள், பிஎஸ்என் (BSN) வங்கியின் கிளைகள், ஏடிஎம் (ATM) இயந்திரங்கள் அல்லது 'myBSN' இணைய வங்கி சேவை வழியாக RM10.60 செலுத்தி UPUOnline அடையாள எண்ணை (Pin Number) பெற்றுக்கொள்ளலாம்.

மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாகச் சமர்ப்பித்த பிறகு, ஆதாரத்திற்காக விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்க கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

 இம்முறை எஸ்பிஎம் மாணவர்களுக்காக 363 கல்வித் திட்டங்களும், எஸ்டிபிஎம் மாணவர்களுக்காக 1,146 திட்டங்களும் பொதுப் பல்கலைக்கழகங்கள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் (Politeknik) மற்றும் சமூகக் கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன. இது தொடர்பான மேல் விபரங்களுக்கு மாணவர்கள் உயர்கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது 03-8684 2363 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.