புக்கிட் மெர்தாஜம் கோயில் விவகாரம்: சட்டத்திற்கு சவால் விடுக்காதீர் - ரமணன் எச்சரிக்கை

7 மார்ச் 2026, 5:27 AM
புக்கிட் மெர்தாஜம் கோயில் விவகாரம்: சட்டத்திற்கு சவால் விடுக்காதீர் - ரமணன் எச்சரிக்கை

பினாங்கு, மார்ச் 6: பினாங்கு, புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனைக்கு அருகிலுள்ள கோயில் விவகாரத்தில், எந்தவொரு தரப்பினரும் தன்னிச்சையாகச் செயல்படவோ, சட்டத்தைக் கையில் எடுக்கவோ வேண்டாம் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கடுமையாக எச்சரித்துள்ளார்.

அனைத்து தரப்பினரும் நாட்டின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்றும், யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் அல்லது பதற்றத்தை உருவாக்கும் எந்தவொரு செயலையும் அரசாங்கம் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது," என நேற்று தலைநகரில் நடைபெற்ற கெசுமா பெர்கேசோ லிண்டுங் (Kesuma Perkeso Lindung) நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் ரமணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், இப்பிரச்சனையை ஒரு மதப் பிரச்சனையாகக் கருத வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மாறாக, சட்ட விதிகளுக்கும், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கும் இணங்க இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.