நோன்புப் பெருநாள்: சுபாங் ஜெயா குடியிருப்பாளர்களுக்கு இலவசக் கழிவு அகற்றும் சேவை

5 மார்ச் 2026, 7:29 AM
நோன்புப் பெருநாள்: சுபாங் ஜெயா குடியிருப்பாளர்களுக்கு இலவசக் கழிவு அகற்றும் சேவை

ஷா ஆலம், மார்ச் 5: எதிர்வரும் ஈகை பெருநாளை முன்னிட்டு, சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றம் (MBSJ) தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவசப் பெருமளவுக் கழிவு (Bulk Waste) அகற்றும் சேவையை வழங்குகிறது.

மாடி வீடுகள் அல்லாத நிலத்தடி வீடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், இன்று முதல் மார்ச் 11-ஆம் தேதி வரை, வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என மாநகராட்சி மன்றம் அறிவித்துள்ளது.

இந்த இலவசச் சேவையின் கீழ் பின்வரும் கழிவுகள் அகற்ற அனுமதிக்கப்படும்:

- பழைய மெத்தைகள் மற்றும் தளவாடங்கள்

- வீடு புதுப்பித்தல் அல்லது வீடு மாற்றும்போது வெளியேற்றப்படும் கழிவுகள்

- மின் சாதனப் பொருட்கள் (மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைத் தவிர)

மாநிலக் கழிவு மேலாண்மை முகமையான KDEB Waste Management Sdn Bhd (KDEBWM), வரும் மார்ச் 9 முதல் மார்ச் 19-ஆம் தேதி வரை இந்தக் கழிவுகளைச் சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ளும்.

இச்சேவையைப் பயன்படுத்த விரும்பும் சுபாங் ஜெயா வாசிகள், KDEBWM நிறுவனத்தை 03-8081 4437 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது 011-3538 4437 என்ற வாட்ஸ்அப் எண் வழியாகவோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.