பினாங்கு, பிப் 22 - இன்று அதிகாலை பினாங்கு, கப்பாளா பத்தாஸ், பெர்மாதாங் கெராய் பெசாரில் நான்கு வீடுகள் தீ விபத்தில் எரிந்து நாசமாயின. இதில் சுமார் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தங்கள் தரப்பிற்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து 27 உறுப்பினர்களுக்கு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, பினாங்கு மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நடவடிக்கை பிரிவின் உதவி இயக்குநர் ஜான் சகுன் ஃபிரான்சிஸ் கூறினார்.
இந்த விபத்தில் நான்கு வீடுகள் 80 விழுக்காடு சேதமடைந்துள்ள நிலையில், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்ததாக அவர் கூறினார். வீடுகள் ஒன்றுக்கொன்று மிக அருகில் அமைந்திருந்ததால் தீ வேகமாகப் பரவியது என தெரிவிக்கப்பட்டது.
இன்று காலை 6 மணிக்கு தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், 6.56 மணிக்கு முழுமையாக அணைக்கப்பட்டது.
-- பெர்னாமா








