கோத்தா கினபாலு, பிப். 23: சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், இன்று காலை நிலவரப்படி 1,774 குடும்பங்களைச் சேர்ந்த 4,348 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 1,449 குடும்பங்களைச் சேர்ந்த 3,427 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சபா மாநிலப் பேரிடர் மேலாண்மை செயலகத்தின் அறிக்கைப்படி, பித்தாஸ், பைத்தான் மற்றும் தாவாவ் ஆகிய மூன்று மாவட்டங்களில் வெள்ளத்தால் 70 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பித்தாஸ் மாவட்டத்தில் மிக அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 1,276 குடும்பங்களைச் சேர்ந்த 2,618 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். நேற்று இந்த எண்ணிக்கை 1,078 குடும்பங்களைச் சேர்ந்த 2,171 ஆக இருந்தது.
மேலும், பைத்தான் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அங்கு 443 குடும்பங்களைச் சேர்ந்த 1,485 பேர் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேவேளையில், தாவாவ் மாவட்டத்தில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 245 பேர் என்ற எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படியே தொடர்கிறது.
மலேசிய வானிலை ஆய்வு மையம், இன்று காலை, மதியம் மற்றும் இரவு வேளைகளில் சபாவின் சில உட்புறப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என முன்னறிவித்துள்ளது.
-- பெர்னாமா
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது
23 பிப்ரவரி 2026, 4:34 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
தாமான் ஸ்ரீ மூடா வெள்ளத் தடுப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்
Media Selangor Team
3 செப்டெம்பர் 2026

national
நேபாளப் பேரிடர்: 25 மலேசிய குடும்பத்தினர் DNA மாதிரிகளை வழங்கினர்
Bernama
3 செப்டெம்பர் 2026

antarabangsa
வெள்ளப் பேரிடர்: பருவநிலை இழப்பீடு கோரும் நேபாள அரசு
Bernama
3 செப்டெம்பர் 2026

antarabangsa
நேபாள வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,220-ஆக அதிகரிப்பு; 4,762 பேர் காணவில்லை
Bernama
3 செப்டெம்பர் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



