கோத்தா கினபாலு, பிப் 22 — இன்று பிற்பகல் சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,401 குடும்பங்களைச் சேர்ந்த 3,266 ஆகக் குறைந்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 2,160 குடும்பங்களைச் சேர்ந்த 5,141 பேராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிதாஸ், பைதான் மற்றும் தவாவ் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் 24 தற்காலிக நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளதாக சபா மாநிலப் பேரிடர் மேலாண்மை செயலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மூன்று மாவட்டங்களிலும் வெள்ளம் 60 கிராமங்களைப் பாதித்தது. ஆனால், இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.
இன்று மாலை சபாவின் உட்புறத்தில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.





