அனைத்துலக ஆட்ட அங்கீகார விண்ணப்பத்தைத் தாமதமாகச் சமர்ப்பித்ததால் FAM-க்கு RM4,900 அபராதம்

28 பிப்ரவரி 2026, 2:51 AM
அனைத்துலக ஆட்ட அங்கீகார விண்ணப்பத்தைத் தாமதமாகச் சமர்ப்பித்ததால் FAM-க்கு RM4,900 அபராதம்

ஷா ஆலாம், பிப். 27: அனைத்துலக இரண்டாம் அடுக்கு நட்புமுறை ஆட்டத்திற்கான அங்கீகார விண்ணப்பத்தைத் தாமதமாகச் சமர்ப்பித்த மலேசியக் காற்பந்து சங்கத்திற்கு (FAM) ஆசியக் காற்பந்து சம்மேளனம் (AFC) 1,250 அமெரிக்க டாலர் (RM4,900) அபராதம் விதித்துள்ளது.

ஆசியக் காற்பந்து சம்மேளனத்தின் ஒழுக்காற்றுக் குழு இந்த முடிவை எடுத்ததாக நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி நடைபெற்ற நெகிரி செம்பிலான் மற்றும் திமோர் லெஸ்தே அணிகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம் தொடர்பான குற்றத்திற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

2027 ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்றில் தஜிகிஸ்தானை எதிர்கொள்வதற்கு முன்பு, திமோர் லெஸ்தே அணிக்கு அவ்வட்டம் ஒரு பயிற்சி ஆட்டமாக அமைந்தது.

பெரித்தா ஹரியான் செய்தியின்படி, நிஜாம் ஜமீல் வழிகாட்டுதலின் கீழ் நெகிரி செம்பிலான் அணி, திமோர் லெஸ்தேவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. அந்த இரண்டு கோல்களையும் தேசிய முன்கள வீரர் லுக்மான் ஹக்கிம் ஷம்சுடின் அடித்தார்.

அனைத்துலக இரண்டாம் அடுக்கு ஆட்டத்திற்கான அங்கீகார விண்ணப்பத்தைத் தாமதமாகச் சமர்ப்பித்த குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்ட ஒரே தேசிய காற்பந்து சங்கம் FAM மட்டுமல்ல.

இந்தோனேசியக் காற்பந்து சங்கம் (PSSI), சவுதி அரேபியக் காற்பந்து கூட்டமைப்பு (SAFF), உஸ்பெகிஸ்தான் காற்பந்து சங்கம் (UFA) மற்றும் தென் கொரியக் காற்பந்து சங்கம் (KFA) ஆகியவையும் இதே காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.